ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரின் சிறப்பு பதிப்பு மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த காரின் சிறப்புகள் மற்றும் கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இதனை கொண்டாடும் விதமாக ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் என்ற பெயரில் சிறப்பு பதிப்பு மாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதிக சிறப்பம்சங்களுடன் மொத்தமே 50 யூனிட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

அடுத்த ஆண்டு புதிய தலைமுறை கோஸ்ட் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனவே, இந்த தலைமுறை மாடலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்த ஸெனித் எடிசன் மாடலை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டு இருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை பெறும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் கோஸ்ட் காரில் மேலும் அதிக கஸ்டமைஸ் ஆப்ஷன்களை ரோல்ஸ்ராய்ஸ் வழங்க இருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் மாடலில் பாரம்பரிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் விசேஷ அலாய் வீல்கள் இரட்டை வண்ணக் கலவையில் கொடுக்கப்பட இருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் கார் பல்வேறு வண்ணக் கலவையில் வர இருக்கிறது. இந்த கார் போகிமியான் ரெட் - பிளாக் டைமண்ட், இகுவாஸு புளூ மற்றும் அண்டலூசியன் ஒயிட் - பிரிமீயர் சில்வர் - ஆர்டிக் ஒயிட் ஆகிய வண்ணக் கலவைகளில் கிடைக்கும்.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

ரோல்ஸ்ராய்ஸ் கார்களின் பானட்டில் கொடுக்கப்படும் ஸ்பிரிட் ஆஃப் எக்டஸி சிலையில் ஸெனித் எடிசன் என்ற சிறப்பு பதிப்பு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். மேலும், மிக உயர்தர பாகங்களுடன் இந்த ஸெனித் எடிசனில் வழங்கப்பட இருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

உட்புறத்தில், டேஷ்போர்டு, இருக்கைகள், சென்டர் கன்சோல் என அனைத்து பகுதிகளிலும் மரம் மற்றும் உயர்தர லெதர் வேலைப்பாடுகளுடன் வர இருக்கிறது. மேலும், "ஒன் ஆஃப் ஃபிப்டி" என்ற பேட்ஜும் பல இடங்களில் கொடுக்கப்பட இருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

விசேஷ எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கை கவர்கள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரியுடன் கொடுக்கப்பட இருக்கிறது. இது இந்த காருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் இருக்கும்.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் காரில் 6.6 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரையும், 820 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. பின்புற சக்கரங்களுக்கு எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் கார் வெளியீடு... படங்களுடன் விபரங்கள்!

அதிக சிறப்பம்சங்களுடன் இந்த சிறப்பு ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் ஸெனித் எடிசன் மாடலின் விலை விபரம் அறிவிக்கப்படவில்லை. ஆனால், மிக அதிக விலை கொண்ட மாடலாக இருக்கும். இது கார் சேகரிப்பில் ஆர்வம் காட்டுவோர் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 16, 2019, 13:43 [IST]
English summary
The Rolls-Royce Ghost Zenith Edition has been unveiled ahead of its debut. The Zenith Edition of the Rolls-Royce Ghost marks the 10th anniversary of the model. It can also be counted as the last hurrah for this generation as the all-new Rolls-Royce Ghost is expected to debut in 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+