திடீரென கார் ரேஸில் களமிறங்கிய சச்சின்... எவ்வளவு வேகத்தில் ஓட்டினார் என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் திடீரென கார் ரேஸில் களமிறங்கியுள்ளார். அவர் எவ்வளவு வேகத்தில் காரை ஓட்டினார் என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

திடீரென கார் ரேஸில் களமிறங்கிய சச்சின்... எவ்வளவு வேகத்தில் ஓட்டினார் என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி

கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். இந்திய கிரிக்கெட் அணிக்காக சச்சின் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. சச்சின் டெண்டுல்கருக்கு இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டை எந்த அளவிற்கு நேசிக்கிறாரோ, அதே அளவிற்கு கார்கள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக பிஎம்டபிள்யூ (BMW) கார்கள்தான் சச்சின் டெண்டுல்கருக்கு மிகவும் விருப்பமானவை.

திடீரென கார் ரேஸில் களமிறங்கிய சச்சின்... எவ்வளவு வேகத்தில் ஓட்டினார் என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி

பிஎம்டபிள்யூ கார்களில், தனியாகவும், குடும்பத்தினருடனும் சச்சின் டெண்டுல்கர் வலம் வருவதை அடிக்கடி பார்க்க முடியும். இந்த சூழலில் உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ள புத்தா சர்வதேச சர்க்யூட்டில் நடைபெற்ற பிஎம்டபிள்யூ நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் கலந்து கொண்டார்.

புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்தான் (Budh International Circuit) இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு பார்முலா 1 (Formula One) ரேஸ் டிராக் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிஎம்டபிள்யூ எம்2 (BMW M2) காரை சச்சின் டெண்டுல்கர் ஓட்டினார்.

ரேஸ் டிராக் என்பதால், காரை ஓட்டுவதற்கு முன்பாக சச்சின் வார்ம் அப் செய்து கொண்டார். வார்ம் அப்பின் போது அவர் கார் ஓட்டிய விதமே அனைவரையும் பிரம்மிக்க வைத்தது. அதே சமயம் ரேஸ் டிராக்கில் சச்சின் அதை விட அசத்தலாக காரை ஓட்டி அமர்க்களப்படுத்தினார்.

திடீரென கார் ரேஸில் களமிறங்கிய சச்சின்... எவ்வளவு வேகத்தில் ஓட்டினார் என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி

ரேஸ் டிராக்கில் சச்சின் டெண்டுல்கர் கார் ஓட்டும்போது, பிரணவ் என்ற ரசிகர் கோ-டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டார். அப்போது ''இங்கு நான் செட் செய்யும் லேப் டைமிங்கை (Lap Timing) முறியடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும்'' என பிரணவ்விடம் சச்சின் கூறினார்.

சச்சின் டெண்டுல்கர் கார் ஓட்டியதை வைத்து பார்க்கையில், புத்தா சர்வதேச சர்க்யூட் அவருக்கு நன்கு பரிட்சயமானது போல் தோன்றுகிறது. வளைவுகளில் எப்போது பிரேக் பிடிக்க வேண்டும் என்பதை அறிந்திருந்த சச்சின், அதற்கு ஏற்ப காரை ஓட்டினார்.

சச்சின் மொத்தம் 2 லேப்கள் காரை ஓட்டினார். இதில், ஒரு லேப்பை 2:20 நிமிடங்களில் நிறைவு செய்தார். இதுதான் சச்சின் செட் செய்த விரைவான லேப் டைமிங். உண்மையில் இது மிக விரைவானதாகவே பார்க்கப்படுகிறது.

திடீரென கார் ரேஸில் களமிறங்கிய சச்சின்... எவ்வளவு வேகத்தில் ஓட்டினார் என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி

ஏனெனில் புத்தா சர்வதேச சர்க்யூட்டில் பதிவு செய்யப்பட்ட மிக வேகமான லேப் டைமிங் 1:59 நிமிடங்கள் ஆகும். இந்த சாதனை ஃபெராரி 458 சேலஞ்ச் (Ferrari 458 Challenge) கார் மூலம் நிகழ்த்தப்பட்டது. ஆனால் இது முழுக்க முழுக்க ரேஸ் கார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருக்கையில் பிஎம்டபிள்யூ எம்2 காரில், அதுவும் ஒரு கிரிக்கெட் வீரர் 2:20 நிமிடங்களில் லேப்பை நிறைவு செய்தது ஆச்சரியமான ஒன்றுதான். பிஎம்டபிள்யூ எம்2 காம்படிசன் (BMW M2 Competition) காரானது, இந்திய மார்க்கெட்டில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் எக்ஸ் ஷோரூம் விலை 79.90 லட்ச ரூபாய். இது எண்ட்ரி லெவல் எம்-சீரீஸ் கார் ஆகும். இந்த காரில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர், இன்லைன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 405 பிஎச்பி பவர் மற்றும் 550 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

திடீரென கார் ரேஸில் களமிறங்கிய சச்சின்... எவ்வளவு வேகத்தில் ஓட்டினார் என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி

பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 4.4 வினாடிகளில் எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 280 கிலோ மீட்டர்கள். முன்னதாக சச்சின் டெண்டுல்கருடன் பயணம் செய்த பிரணவ், சச்சின் கார் ஓட்டுவதை வீடியோ எடுத்து கொண்டார்.

சச்சின் வேகமாக கார் ஓட்டுவது, இருவருக்கும் இடையேயான உரையாடல்கள் ஆகியவை அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடரான சச்சின், தனக்கு விருப்பமான கார்கள் பற்றியும் இந்த வீடியோவில் பேசுகிறார். குடும்பத்துடன் வெளியே செல்வதென்றால், பிஎம்டபிள்யூ 760 எல்ஐ எம்-ஸ்போர்ட் (BMW 760 Li M-Sport) கார்தான் தனது முதல் தேர்வாக இருக்கும் என சச்சின் கூறினார்.

அதே சமயம் லாங் டிரிப் அடிக்க வேண்டுமென்றால், பிஎம்டபிள்யூ எக்ஸ்5எம் (BMW X5M) காரைதான் எடுப்பேன் எனவும் சச்சின் தெரிவித்தார். இவை தவிர பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8) காரிலும் அடிக்கடி பயணம் செய்வேன் என்றும் சச்சின் கூறினார்.

திடீரென கார் ரேஸில் களமிறங்கிய சச்சின்... எவ்வளவு வேகத்தில் ஓட்டினார் என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி

சச்சின் டெண்டுல்கரின் சொந்த ஊர் மும்பை. எனவே மும்பை சாலைகளில், மேற்கண்ட கார்களில் சச்சின் வலம் வருவதை அடிக்கடி பார்க்க முடியும். குறிப்பாக ஞாயிற்றுகிழமைகளில் பிஎம்டபிள்யூ ஐ8 காரில் சச்சின் அடிக்கடி உலா வருவார்.

ஜெர்மனியை சேர்ந்த உலகின் முன்னணி கார் பந்தய வீரரான மைக்கேல் சூமாக்கரும் (Micheal Schumacher), சச்சின் டெண்டுல்கரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

Tamil
English summary
Sachin Drove BMW M2 In Budh International Circuit: Fastest Lap Time Set By Him Is 2:20 Minutes. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more