53 ஆயிரம் லைக்குகளை அள்ளி குவித்த சச்சின் வெளியிட்ட வீடியோ... அப்படி என்னதான் இருக்கு அதுல...?
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின், அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ 366 ஆயிரம் பார்வையாளர்களைக் கடந்து உள்ளது. இந்த வீடியோ குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கிரிக்கெட் ரசிகர்கள் பலராலும் மாஸ்டர் என பாசமாக அழைக்கப்படும் சச்சின், மிகப்பெரிய கார் விரும்பி என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..? ஆம், கிரிக்கெட் உலகின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் ஓர் மிகப் பெரிய கார் பிரியர் ஆவார். இவருக்கு கிரிக்கெட் மீது இருக்கும் ஈர்ப்பைப் போன்றே, கார்கள் மீதும் அளவு கடந்த பற்றுடையவராக இருக்கின்றார்.

ஆகையால், இவரிடம் பல்வேறு சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் ரகத்திலான கார்கள் இருக்கின்றன. மேலும், இவர் அவ்வப்போது, அவரின் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில், வாகனம் இயக்குவது குறித்தும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார்.

அந்தவகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாக ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், அவர் தனது முதல் ஓட்டுநர் இல்லா தானியங்கி கார்குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், கார் தானகவே பார்க் செய்வதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பதிவிட்ட அவர், "தானியங்கி கார் மூலம் நான் புதுமையான உணர்வை உணர்ந்துள்ளேன். இது, மிஸ்டர் இந்தியா கட்டுபாட்டில் எடுத்ததைப் போல் உணர்வை வழங்குகின்றது. இந்த கார் இந்த வார இறுதி வரை எனது நண்பர்களுடன் உற்சாகமாக கழிக்க உதவும்" என கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரிடம் ஏற்கனவே ஏராளாமான கார்கள் இருக்கின்றன. அதில், மாருதி 800 காரும் அடங்கும். இத்துடன், பிஎம்டபிள்யூ ஐ8, பிஎம்டபிள்யூ 750எல்ஐ எம் ஸ்போர்ட், பிஎம்டபிள்யூ எம்5 உள்ளிட்ட பல்வேறு சொகுசு ரக கார்களுன் அவரிடம் இருக்கின்றது.
தற்போது, இந்த வரிசையில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் தானியங்கி கார் புதிய வரவாக இணைந்துள்ளது.

வீடியோவில், சிவப்பு நிற பிஎம்டபிள்யூ காருக்கு பின்னால் நிற்கும் அந்த வெள்ளை நிற தானியங்கி பார்க் செய்து கொள்ளும் கார், சச்சின் வாய்ஸ் கமெண்டை உணர்ந்து, தானாக நகர ஆரம்பிக்கின்றது. அது, மெல்ல நகர்ந்து, குறிப்பிட்ட இடத்திற்கு சென்று, தன்னைத் தானே பார்க் செய்து கொள்கின்றது. ஆனால், அது என்ன கார் என்பது குறித்த தகவல்தான் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

41 விநாடிகள் அடங்கியுள்ள இந்த வீடியோ பதிவினை 366 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டுவிட்டர் பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும், 53.8 ஆயிரத்திற்கும் லைக் தெரிவித்துள்ளனர்.
சச்சின் தற்போது ஓய்வில் இருந்தாலும், இவரின் ஆட்டத்தை மீண்டும் காண மாட்டோமா... என்ற ஏக்கத்தில் அவரின் ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அதேசமயம், அவரின் புகழை தற்போதுவரை பாடுகின்ற ரசிகர்களும் இருந்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில், கிரிக்கெட் உலகில் அதிகளவில் சாதனையை நிகழ்த்தியவராக சச்சின் இருக்கின்றார்.
தற்போது, வைரலாகி வரும் சச்சினின் இந்த வீடியோவைப் போன்றே இதற்கு முன்னதாகவும், ஓர் வீடியோ வைரலானது. அந்தவீடியோவில், சச்சின் ரேஸில் கலந்துகொள்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
அது, உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா சர்வதேச சர்க்யூட்டில் நடைபெற்ற பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்டதாகும். அதில், கலந்துக்கொண்ட சச்சின், அந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக காரை ஓட்டி தொடங்கி வைத்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் அதிகளவில் வைரலாகியது.

இதில், சச்சின் மொத்தம் 2 லேப்கள் வரை காரை ஓட்டினார். அதில், ஒரு லேப்பை 2:20 நிமிடங்களிலும், இரண்டாவதை 1:59 நிமிடங்களிலும் நிறைவு செய்தார். இதுதான் சச்சின் செட் செய்த விரைவான லேப் டைமிங் ஆகும். உண்மையிலேயே இது அதிவிரைவான லேப் டைமிங். இந்த சாதனையை அவர், ஃபெராரி 458 சேலஞ்ச் கார் மூலம் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








