மாற்றியமைக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் கார்: யார் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

பிரபல கிரிக்கெட் வீரரின் விலையுயர்ந்த காரை மாற்றியமைத்திருப்பதாக டிசி டிசைன் நிறுவனம் அறிவித்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் கார்: யார் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

கிரிக்கெட் பார்வையாளர்களாக இருக்கும் பெரும்பாலான ரசிகர்கள் சச்சினின் தீவிர பக்தர்கள் உள்ளனர். இவர் தற்போது, ஓய்வில் இருந்தாலும், இவரின் முந்தைய ஆட்டங்களை தற்போதும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் அவர்கள் ரசிகர்கள். அந்த அளவிற்கு இவர் இந்திய அணிக்காக ஆற்றிய பங்கும், சாதனையும் ஏராளம். இதனாலேயே இவரை மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் என அவரின் ரசிகர்கள் அன்பாக அழைத்து வருகின்றனர்.

மாற்றியமைக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் கார்: யார் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

சச்சினுக்கு கிரிக்கெட்டை போலவே, கார்கள் மீதும் அலாதியான பிரியம். இதன்காரணமாக இவர் கவர்ச்சிகரமான மற்றும் ஆடம்பரமான பல கார்களை வாங்கி குவித்துள்ளார். அதன்படி, இவரின் கேரேஜில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களே அதிகமாக உள்ளன. இதன்காரணமாகவே, சச்சினை இந்தியாவின் பிராண்ட் அம்பாஸிடராக பிஎம்டபிள்யூ நிறுவனம் நியமித்துள்ளது. சச்சின் பெரும்பாலும் பிஎம்டபிள்யூ கார்களையே பயன்படுத்தி வருகிறார். தனியாகவோ அல்லது குடும்பத்துடன் பயணிக்க பிஎம்டபிள்யூ காரையே அதிகம் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

மாற்றியமைக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் கார்: யார் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இந்நிலையில், சச்சின் அதிகம் பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ ஹைபிரிட் ஐ8 ஸ்போர்ட்ஸ் மாடல் காரை டிசி டிசைன் நிறுவனம் கஷ்டமைஸ் செய்துள்ளது. தற்போது, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் சச்சின் மஹராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் வசிக்கும் சிலரின் கண்களில் சச்சின் காரை ஓட்டிச் செல்லும்போது படுவது வழக்கம். அவ்வாறு, அவர் பல நேரங்களில் இந்த ஐ8 ஸ்போர்ட்ஸ் காரில் மட்டுமே பயணிப்பார் என புத்தா இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர்.

மாற்றியமைக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் கார்: யார் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இந்த நிலையில்தான், சச்சினின் வெள்ளை நிறம் கலந்த நீல நிற ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரை டீசி டிசைனிங் நிறுவனம் சிவுப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் கஸ்டமைஸ் செய்துள்ளது. மேலும், காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திலும் சில மாற்றங்கள் அந்த நிறுவனம் செய்துள்ளது. அதன்படி, காரின் முகப்பு பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்ட கிரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதிய பம்பர் மற்றும் பெரிய அளவிலான ஏர் டேம்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய பம்பர் காரின் ஸ்போர்ட்டி லுக்கை மேலும் அதிகரித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் கார்: யார் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

இதைத்தொடர்ந்து, காரின் பின்பக்கத்தில் நான்கு வெளியேற்றங்களைக் கொண்ட சைலென்சர் அமைப்பை டிசி நிறுவனம் பொருத்தியுள்ளது. மேலும், வென்டட் பம்பர் பேனல்களும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, காரின் உட்புறத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், சவுண்ட் ஸ்டீரியோ சிஸ்டம் மற்றும் இருக்கைகள் உள்ளிட்டவையை புதிதாக மாற்றம் செய்து பொருத்தியுள்ளனர். இந்த புதிய மாற்றங்களால் சச்சினின் ஹைபிரிட் ஐ8 காரானாது மேலும் ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

மாற்றியமைக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் கார்: யார் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

முழுமையாக கட்டமைக்கப்பட்ட மாடலாக ஐ8 கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், மிகவும் நேர்த்தியான தோற்றத்தினை இந்த கார் பெற்றுள்ளது. ஐ8 கார் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டிருப்பதால் இதன் எடை வெறும் 1485 கிலோ மட்டும் தான். இந்த காரில் 357பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரரின் கார்: யார் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

பெட்ரோல் என்ஜினானது 228பிஎச்பி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என்ஜின் ஆற்றல் 129பிஎச்பி-யை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதன் மொத்த ஆற்றல் 357பிஎச்பி ஆகும். இந்த கார் இந்திய மதிப்பில் எக்ஸ்-ஷோரூம் விலையில் 2.29 கோடி ரூபாயாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 30, 2019, 15:00 [IST]
English summary
Sachin Tendulkar’s BMW i8 gets customized by DC Design. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+