ஆரம்பமே அமர்க்களம்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டை காலி செய்யும் டாடா ஹாரியர்

மஹிந்திரா எக்ஸ்யூவி500, டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ், டாடா நெக்ஸா ஆகிய எஸ்யூவி கார்களின் விற்பனை நிலவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆரம்பமே அமர்க்களம்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டை காலி செய்யும் டாடா ஹாரியர்...

இந்தியாவில் எஸ்யூவி வகை கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து கொண்டே வருகிறது. விலை சற்று அதிகம்தான் என்றாலும், எஸ்யூவி வகை கார்கள் வாடிக்கையாளர்களின் முதன்மை தேர்வாக மாறி வருகின்றன.

இந்த சூழலில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா ஹாரியர் எஸ்யூவி, கடந்த ஜனவரி மாத கடைசியில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஹாரியர் எஸ்யூவிக்கு டாடா நிறுவனம் மிக சவாலான விலையை நிர்ணயம் செய்துள்ளது.

ஆரம்பமே அமர்க்களம்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டை காலி செய்யும் டாடா ஹாரியர்...

டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.12.69 முதல் ரூ.16.25 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் டாடா ஹெக்ஸா ஆகிய 4 எஸ்யூவி கார்களின் பிப்ரவரி மாத விற்பனை நிலவரத்தை இனி பார்க்கலாம்.

விலை அடிப்படையில் பார்த்தால், இந்த 4 மாடல்களும் வித்தியாசமானவை. டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார்களை காட்டிலும், ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹெக்ஸா ஆகிய கார்கள் விலை உயர்ந்தவை.

கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், டாடா ஹாரியர் மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்கள் மட்டுமே, பிப்ரவரி மாதத்தில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதே சமயம் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 மற்றும் டாடா ஹெக்ஸா ஆகிய மாடல்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

ஆரம்பமே அமர்க்களம்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டை காலி செய்யும் டாடா ஹாரியர்...

மஹிந்திரா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில், 1,806 எக்ஸ்யூவி500 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 1,901 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 2018 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில், 2019 பிப்ரவரியில் விற்பனை 5 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இது கூட பரவாயில்லை. 5 சதவீதம்தான். 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதத்தில் எக்ஸ்யூவி500 காரின் விற்பனை 32 சதவீதம் என்கிற அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதே நேரத்தில் டாடா நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,449 ஹாரியர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், கடந்த ஜனவரி மாத கடைசியில்தான் டாடா ஹாரியர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இது முழுமையாக விற்பனையில் இருந்த முதல் மாதம் பிப்ரவரிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் டாடா ஹாரியர்-மஹிந்திரா எக்ஸ்யூவி 500 கார்களுக்கு போட்டி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பமே அமர்க்களம்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டை காலி செய்யும் டாடா ஹாரியர்...

தற்போது இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில், டாடா ஹாரியரின் சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 3 மாதங்களுக்கும் மேலாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

அதே சமயம் கடந்த பிப்ரவரி மாதத்தில், 1,304 ஜீப் காம்பஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 1,941 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. அதாவது 2018 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில், 2019 பிப்ரவரியில் விற்பனை 33 சதவீதம் சரிவடைந்துள்ளது.

ஆனால் 2019ம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில், விற்பனை 2 சதவீதம் என்கிற அளவிற்கு வளர்சியடைந்துள்ளது.

ஆரம்பமே அமர்க்களம்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டை காலி செய்யும் டாடா ஹாரியர்...

இதில், டாடா ஹெக்ஸாதான் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. கடந்த பிப்ரவரியில் 280 டாடா ஹெக்ஸா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2018ம் ஆண்டு பிப்ரவரியில் 895 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

2018 பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில், டாடா ஹெக்ஸா கார் விற்பனையானது, 2019 பிப்ரவரியில் 69 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையேயான வித்தியாசம் வெறும் 29 யூனிட்கள்தான் என்றாலும், இனி டாடா ஹெக்ஸாவின் விற்பனையை டாடா ஹாரியர் அப்படியே விழுங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 12, 2019, 8:42 [IST]
English summary
Sales Analysis In February 2019: Tata Harrier, Tata Hexa, Jeep Compass, Mahindra XUV500. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+