ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

2019ம் ஆண்டு மே மாதத்திற்கான டொயோட்டா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

இந்தியாவில் பல்வேறு காரணங்களால் சமீப காலமாக கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. இதனால் மாருதி சுஸுகி உள்பட முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களே மிக கடுமையாக திணறி வருகின்றன.

ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்திலும் இதே நிலைதான் நீடித்துள்ளது. இந்த சூழலில் டொயோட்டா இந்தியா (Toyota India) நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்திற்கான தங்களின் சேல்ஸ் ரிப்போர்ட் தற்போது வெளியிட்டுள்ளது.

ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டில் 12,138 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 13,113 ஆக இருந்தது.

ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

இதன் மூலம் கடந்த மே மாதத்தில் இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை சுமார் 7 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் அதன் ஏற்றுமதி சற்றே அதிகரித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து எட்டியோஸ் சீரிஸ் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த 'மேட் இன் இந்தியா' கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து 827 எட்டியோஸ் சீரிஸ் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது.

ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

தற்போது இந்த எண்ணிக்கை 928 யூனிட்களாக சற்று அதிகரித்துள்ளது. ஆக மொத்தம் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் ஒட்டுமொத்தமாக 13,066 கார்களை விற்பனை டொயோட்டா நிறுவனம் செய்துள்ளது.

ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் 13,940 யூனிட்களாக இருந்தது. இது சுமார் 6 சதவீத சரிவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 20 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

ஆனால் 2019ம் ஆண்டு மே மாதத்தில் டொயோட்டா நிறுவன கார்களின் விற்பனை அதனுடன் ஒப்பிடப்படும் அளவிற்கு இல்லை. கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூட டொயோட்ட இந்தியா நிறுவனம் விற்பனையில் 22 சதவீத வீழ்ச்சியைதான் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

இந்த சூழலில் டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போது கை கோர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியின் முதல் தயாரிப்பு வரும் ஜூன் 6ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

ஆட்டம் காணும் இந்திய ஆட்டோமொபைல் துறை... டொயோட்டா நிறுவனமும் தப்பவில்லை...

டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கார், மாருதி சுஸுகி பலேனோ பீரிமியம் ஹேட்ச்பேக் காரின் ரீபேட்ச் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, June 2, 2019, 11:48 [IST]
English summary
Sales Report For May 2019: Toyota Posts 7 Per cent Decline In India. Read in Tamil
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+