டீசரில் பிரபல ஹீரோவைவிட அதிக மாஸ் காட்டும் கார்... எந்த கார் தெரியுமா..?

பிரபல ஹீரோவின் புதிய படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது. இதில், அந்த ஹீரோவுக்கிற்கு இணையான மாஸ் என்ட்ரீ அந்த காருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டீசரில் பிரபல ஹீரோவைவிட அதிக மாஸ் காட்டும் கார்... எந்த கார் தெரியுமா..?

விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் பிரபல நட்சத்திர ஹீரோவின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரில் ஹீரோவுக்கு இணையான அளவில் அவர் வரும் காருக்கும் மாஸ் என்ட்ரீ கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஹீரோக்கள் என்ட்ரீ என்றாலே செம்ம மாஸாக இருக்கும். அதிலும், அவர்கள் காரில் கெத்தாக வந்திறங்குவதைப் போன்ற காட்சி இருந்தால் அது படு மாஸாக காட்சியளிக்கும்.

டீசரில் பிரபல ஹீரோவைவிட அதிக மாஸ் காட்டும் கார்... எந்த கார் தெரியுமா..?

அந்தவகையிலான மாஸ் டீசர்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் பிரபல நட்சத்திரமான சல்மான் கானின் நடிப்பில் வெளிவரவுள்ளது தபாங்3. இப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

டீசரில் பிரபல ஹீரோவைவிட அதிக மாஸ் காட்டும் கார்... எந்த கார் தெரியுமா..?

இந்நிலையில், சமீபத்தில் அப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அதில், ஓர் கல் குவாரி போன்ற இடத்தில் சுற்றி சுற்றி வரும் அந்த கார், அந்த இடத்தில் உள்ள புழுதியைக் கிளப்பிக் கொண்டு காட்சியளிக்கின்றது. இதில், ஓர் ஹீரோவின் தோன்றுதலுக்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படுமோ, அதே அளவிலான முக்கியத்துவம் அந்த காருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

டீசரில் பிரபல ஹீரோவைவிட அதிக மாஸ் காட்டும் கார்... எந்த கார் தெரியுமா..?

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள காவல்துறையின் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையிலேயே, காவல் அதிகாரியாக நடிக்கும் சல்மான் கானுக்கு இப்படத்தில் இந்த கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் காவல்துறை மட்டுமின்றி இந்திய பாதுகாப்பு படைத்துறைகள் பலவற்றிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

டீசரில் பிரபல ஹீரோவைவிட அதிக மாஸ் காட்டும் கார்... எந்த கார் தெரியுமா..?

தற்போது டிரெய்லரில் காட்சியளித்திருக்கும் ஸ்கார்பியோ புத்தம் தலைமுறை மாடலாகும். இதில், அதி திறன் வாய்ந்த எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய மாடல் கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பல எஸ்யூவி கார்களில் இந்த ஸ்கார்பியோவில் இடம்பெற்றிருக்கும் அதே எஞ்ஜின்தான் காணப்படுகின்றது.

இது, 2.2 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜின் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இதேபோன்று, மஹிந்திரா ஸ்கார்பியோவின் மற்ற வேரியண்டுகளில் 2.2 லிட்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 120 பிஎச்பி மற்றும் 280 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. இதில், எம்ஹாவ்க் டீசல் எஞ்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தேர்விலும், சாதாரண வேரியண்டுகளில் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனிலும் கிடைக்கும்.

டீசரில் பிரபல ஹீரோவைவிட அதிக மாஸ் காட்டும் கார்... எந்த கார் தெரியுமா..?

தொடர்ந்து, ஆரம்பநிலை வேரியண்டாக காட்சியளிக்கும் ஸ்கார்பியோ எஸ்3 மாடலில் 2.5 லிட்டர் டிஐ எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 75 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களைக் காட்டிலும் புத்தம் புதிய பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட ஸ்கார்பியோ அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் பழைய மாடல்களைக் காட்டிலும் அதிக இட வசதி மற்றும் கூடுதல் சொகுசு வசதிகளைக் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

டீசரில் பிரபல ஹீரோவைவிட அதிக மாஸ் காட்டும் கார்... எந்த கார் தெரியுமா..?

அதேசமயம், தற்போதைய மாடலைக் காட்டிலும் அதிக விலைக் கொண்டதாகவும் காட்சியளிக்க பல வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால், விரைவில் புதிய மாசு உமிழ்வு நடைமுறைக்கு வரவுள்ளது. இதனால், வாகனங்களின் உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆகையால், விரைவில் அறிமுகமாக இருக்கும் ஸ்கார்பியோவின் விலையும் அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றது.

Article Published On: Thursday, December 19, 2019, 11:19 [IST]
English summary
Salman Khan New Ride With Mahindra Scorpio SUV In Dabangg 3. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+