உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

கேரள வெள்ள மீட்பு பணிகளின்போது, தங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களை காப்பாற்றிய ஹீரோக்கள், தற்போது பிரச்னை ஒன்றில் சிக்கி கொண்டுள்ளனர். எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் களத்தில் இறங்கி பணியாற்றிய அவர்கள், 'தயவு செய்து உதவுங்கள்' என முதல் முறையாக வேண்டி கொண்டுள்ளனர்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலத்தில் பெரு மழை பெய்தது. இடைவிடாமல் பெய்த பேய் மழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டின. இதனால் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

பெரும்பாலான அணைகளில் இருந்து கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

குறிப்பாக வயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் வெளி உலக தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் அம்மாவட்டங்களின் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். வரலாறு காணாத இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

கடந்த 2018ம் ஆண்டில், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உருக்கமான சம்பவங்களில் ஒன்றாக கேரள வெள்ளம் பார்க்கப்படுகிறது. எனவே கேரள மக்களுக்கு பல்வேறு இடங்களில் இருந்து உதவிக்கரம் நீண்டது.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகளும், பல்வேறு முன்னணி நிறுவனங்களும், கேரள மக்களுக்கு நிவாரண தொகை வழங்கினர். இதுதவிர பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் நேரடியாக கேரளாவிற்கு சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவினர்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

குறிப்பாக அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தனியார், அரசு நிறுவன ஊழியர்கள், இளைஞர்கள், தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் நிவாரண பொருட்களை சேகரித்து கொண்டு சென்று கேரள மக்களுக்கு வழங்கினர்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தால், தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநில மக்களிடையே நிலவி வந்த இறுக்கமான சூழல் இதனால் தகர்ந்தது. இறுதியில் மனிதநேயம் வென்றது. இதுதவிர கேரள மக்கள் பலரும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

குறிப்பாக எஸ்யூவி வகை கார்களை வைத்திருப்பவர்கள்தான் மீட்பு பணிகளில் முக்கிய பங்கு வகித்தனர். கேரள மாநிலம் மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இப்படிப்பட்ட பகுதிகளில், ஷோரூம்களில் இருந்து வரும் வாகனங்களை அப்படியே பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

எனவே கடினமான தரை மேற்பரப்புகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப, வாகனங்களில் சில ஆல்டரேஷன்கள் செய்யப்படுகின்றன. இதனால் கேரள மாநிலத்தில், ஆல்டர் செய்யப்பட்ட கார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்கி கொண்டிருக்கின்றன.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

இப்படிப்பட்ட கார்கள்தான் வெள்ள மீட்பு பணிகளில் முக்கிய பங்காற்றின. சாதாரண கார்களை கொண்டு, வெள்ள மீட்பு பணிகளை செய்வது இயலாத காரியம். எனவேதான் ஆல்டர் செய்யப்பட்ட ஆஃப் ரோடு கார்களை வைத்திருப்பவர்கள் உதவி செய்ய முன்வந்தனர்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

இந்த கார்களில் வழக்கத்திற்கு மாறான பெரிய டயர்கள், சிறப்பான பிரேக்குகள், கூடுதல் விளக்குகள், ஸ்னோர்கெல் ஏர் இன்டேக் (Snorkel Air-intake) ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும். இதில், ஸ்னோர்கெல் ஏர் இன்டேக் அமைப்பானது தண்ணீரில் இருந்து காரின் இன்ஜினை காக்கும்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

இதன்மூலம்தான் ஸ்னோர்கெல் ஏர் இன்டேக் பொருத்தப்பட்ட எஸ்யூவி கார்களை வைத்திருப்பவர்கள், தண்ணீர் சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று சர்வ சாதாரணமாக மீட்பு பணிகளில் ஈடுபட முடிந்தது. ஆனால் இப்படிப்பட்ட ஆஃப் ரோடு எஸ்யூவி கார்கள் கூட, மீட்பு பணிகளின்போது சேதமடைய நேரிட்டது.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

ஆனால் அந்த கார்களின் உரிமையாளர்கள் தற்போது வரை இழப்பீடு எதையும் கேட்கவில்லை. கைமாறு எதையும் எதிர்பார்க்காமல்தான் அவர்கள் உதவி செய்ய முன்வந்தனர். இத்தனைக்கும் கேரள முதல் அமைச்சர் பினராயி விஜயனே அவர்களின் உதவியை கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பிறகு, ஆஃப் ரோடு கார்களை வைத்திருப்பவர்கள், மீட்பு பணியில் ஈடுபட முன்வர வேண்டும் என பினராயி விஜயன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கோரிக்கை வைத்தார். இதன்பின் ஏராளமான ஆஃப் ரோடு கார் உரிமையாளர்கள் உதவிக்கு வந்தனர்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

ஆஃப் ரோடு கார்கள் ஆல்டர் செய்யப்பட்டவை என்பதால், பார்க்கவே வித்தியாசமாக காட்சியளிக்கும். இத்தகைய கார்களை கொண்டு வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது. வெள்ளம் வடிந்த பிறகு, கேரள அரசே அவர்களை அழைத்து பாராட்டு விழா நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

ஆனால் எந்த கார்களால் பாராட்டு கிடைத்ததோ, அதே கார்களால் தற்போது அதன் உரிமையாளர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் எவ்விதமான மாடிஃபிகேஷனும் (Modification) செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

அத்துடன் ஆல்டர் செய்யப்பட்ட வாகனங்களை தடையும் செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு ஏற்ப, ஆல்டர் செய்யப்பட்ட வாகனங்களை பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

தற்போது வரை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஆனால் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நடவடிக்கை தொடங்கும் என கூறப்படுகிறது. இதனால் ஆல்டர் செய்யப்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் கவலையடைந்துள்ளனர்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

குறிப்பாக கேரள வெள்ள மீட்பு பணிகளில் உதவி செய்தவர்களுக்குதான் அதிக கவலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் தற்போது கேரள அரசின் உதவியை நாடியுள்ளனர். தங்கள் கார்களை மாடிஃபிகேஷன் செய்யப்பட்டவையாக கருதக்கூடாது என கேரள அரசிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

ஆஃப் ரோடு ஆர்வலரான டைசன் தாரப்பெல் என்பவர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தற்போது இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். இதில், மிக கடினமான வெள்ள மீட்பு பணிகளில், ஆல்டர் செய்யப்பட்ட கார்கள் உதவி செய்ததை பினராயி விஜயனுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

அத்துடன் ஆல்டர் செய்யப்பட்ட கார்கள்தான் வெள்ள மீட்பு பணிகளை சாத்தியப்படுத்தின எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே ஆல்டர் செய்யப்பட்ட கார்களை பாதுகாக்க, கேரள மாநில மக்கள் ஒன்று திரள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

இந்த பிரச்னைக்கு தீர்வு காண கேரள மாநில அரசு உடனடியாக உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதில், ஒரு சிலர் வாகனங்களை தங்கள் குழந்தைகளை போல எண்ணி பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரை பணயம் வைத்து மக்களை மீட்டவர்களுக்கு ஏற்பட்ட சோகம்... கதறும் கேரள வெள்ள மீட்பு பணி ஹீரோக்கள்...

எனவே இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உயிரை பணயம் வைத்து வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு பிரச்னை எனும்போது, இந்த விஷயத்தில் கேரள அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்? என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

Image Source: Tisson Tharappel

Most Read Articles
English summary
SC Bans Vehicle Modification: SUV Cars That Rescued People During Kerala Floods May Face Heat. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X