மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர் ஒருவர், தனது தந்தைக்காக ஆச்சரியமான காரியம் ஒன்றை செய்துள்ளார்.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

உத்தர பிரதேச மாநிலம் பாண்டா பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருபவர் விபின் பவன் சாகு. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது பாராகிளைடிங் சாகசத்தில் அவர் ஈடுபட்டார். ஆனால் காற்றில் பறக்க தொடங்கிய உடனேயே அவரை மரண பயம் தொற்றி கொண்டது.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

எனவே உடனடியாக தன்னை கீழே இறக்கி விடும்படி பயிற்சியாளரிடம் அவர் மன்றாடினார். இந்த வீடியோ வெளியாகி சமூக வலை தளங்களில் காட்டு தீ போல பரவியது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் விபின் பவன் சாகுவின் செய்கைகளை பார்த்து, அவரை கிண்டல் அடிக்க தொடங்கினர். இது தொடர்பாக மீம்ஸ்களும் அதிக அளவில் பகிரப்பட்டன.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

பாராகிளைடிங்கில் ஈடுபட்டபோது மரண பயத்தில் அலறிய வீடியோ வைரலாக பரவியதால், விபின் பவன் சாகு ஓவர்நைட்டில் பிரபலமடைந்தார். இது தொடர்பாக பல்வேறு மொழிகளின் முன்னணி செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டன. நெட்டிசன்களின் கேலி, கிண்டலுக்கு ஆளான விபின் பவன் சாகுவின் பாராகிளைடிங் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்த சூழலில் தற்போது மீண்டும் ஒரு முறை விபின் பவன் சாகுவின் பெயர் செய்திகளில் இடம்பெற தொடங்கியுள்ளது. ஆனால் இம்முறை முற்றிலும் வேறு ஒரு காரணத்திற்காக அவர் பிரபலமாகியுள்ளார். விபின் பவன் சாகு தனது தந்தைக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஒன்றை சமீபத்தில் பரிசாக அளித்துள்ளார்.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

இது தொடர்பான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். மஹிந்திரா ஸ்கார்பியோ காரை தனது தந்தைக்கு பரிசளிப்பதாக இந்த வீடியோவில் விபின் பவன் சாகு கூறியுள்ளார். மேலும் அனைவரின் அன்பாலும்தான் இது சாத்தியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் விபின் பவன் சாகுவின் தந்தை மஹிந்திரா ஸ்கார்பியோ காரை ஓட்டுவதையும் நம்மால் காண முடிகிறது.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

ஆனால் புத்தம் புதிய கார் என்பதால், அதை ஓட்டுவதற்கு அவர் சற்றே தயக்கம் காட்டுகிறார். இதனையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் வயதான தந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்த இதுபோன்ற பரிசுகள் சிறப்பான வழிதான். விபின் பவன் சாகு தனது தந்தைக்கு மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பரிசளிக்கும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

இந்திய மார்க்கெட்டில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் கூட வாடிக்கையாளர்கள் மத்தியில் மஹிந்திரா ஸ்கார்பியோ மிகவும் பிரபலமான மாடலாகவே உள்ளது. கம்பீரமான தோற்றம் மற்றும் வலுவான கட்டுமான தரம் ஆகிய காரணங்களால்தான் மஹிந்திரா ஸ்கார்பியோ மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

தற்போதைய சூழலில் மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு போட்டி அதிகரித்து விட்டது. ஆனால் இன்னமும் கூட டயர் II மற்றும் டயர் III நகரங்களை சேர்ந்த பலரின் முதல் தேர்வாக மஹிந்திரா ஸ்கார்பியோதான் உள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோவின் லேடர் ஃப்ரேம் சேஸிஸ், இந்தியாவின் கடினமான சாலைகளுக்கு பொருத்தமான காராக இதனை மாற்றுகிறது.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பழுது பார்ப்பதும் மிக எளிமையான விஷயம்தான். சாதாரண மெக்கானிக் ஷாப் வைத்திருப்பவர்களால் கூட மஹிந்திரா ஸ்கார்பியோ காரை எளிதாக பழுது பார்த்து விட முடியும். இதன் காரணமாகவும் அனைத்து நேரங்களிலும் கார் தேவைப்படுபவர்கள் மத்தியில் மஹிந்திரா ஸ்கார்பியோ பிரபலமாக திகழ்கிறது.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

மஹிந்திரா நிறுவனம் தற்போது புத்தம் புதிய ஸ்கார்பியோ காரை களமிறக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காரை மஹிந்திரா நிறுவனம் சாலை சோதனைகளிலும் கடந்த சில மாதங்களாக ஈடுபடுத்தி கொண்டுள்ளது. தற்போதைய வெர்ஷனுடன் ஒப்பிடும்போது புதிய வெர்ஷன் ஸ்கார்பியோ தோற்றத்தில் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கலாம்.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

அதாவது தற்போதைய வெர்ஷனுடன் ஒப்பிடும்போது புதிய வெர்ஷன் ஸ்கார்பியோ கார் பெரிதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்க கூடும். இதன் காரணமாக புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விலை அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தம் புதிய ஸ்கார்பியோ கார் புத்தம் புதிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜினை பெறவுள்ளது.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

இந்த புதிய இன்ஜின்தான் இந்திய மார்க்கெட்டில் அடுத்த தலைமுறை மஹிந்திரா கார்களில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இன்ஜின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணையானதாக இருக்கும். அத்துடன் தற்போதைய 2.2 லிட்டர் எம்-ஹவாக் இன்ஜின் உடன் ஒப்பிடும்போது அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.

மரண பயத்தால் ஓவர்நைட்டில் வேர்ல்டு பேமஸ் ஆன இளைஞர்... தந்தைக்காக செய்த காரியத்தால் ஆச்சரியம்...

மேலும் இந்திய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், பல்வேறு புதிய வசதிகளும் புதிய ஸ்கார்பியோ காரில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஸ்கார்பியோ காரின் தயாரிப்பு நிலை வெர்ஷனை மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Article Published On: Thursday, November 21, 2019, 15:46 [IST]
English summary
Scared Paragliding Man Gifted His Father A New Mahindra Scorpio: Video. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+