இந்தியாவிற்கு வருகிறது ஷெல்பி... படங்களில் மட்டுமே பார்த்த கார்களை இனி சாலையில் காணலாம்...

ஷெல்பி இந்தியாவிற்கு வருகிறது. எனவே படங்களில் மட்டுமே கண்டுகளித்து வந்த ஷெல்பி மஸ்டாங் வேரியண்ட்களை இனி இந்திய சாலைகளிலும் நாம் பார்க்க போகிறோம்.

இந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி... படங்களில் மட்டுமே பார்த்த கார்களை இனி சாலையில் காணலாம்...

ஹாலிவுட்டில் ஹிட் அடித்த ''பாஸ்ட் அண்ட் தி ப்யூரியஸ்'' (Fast And The Furious) சீரிஸ்களில் கலக்கிய வேக அசூரர்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்த தனித்துவமான கார் பிராண்டு ஷெல்பி (Shelby) தற்போது இந்தியாவையும் கலக்க தயாராகி விட்டது. ஷெல்பி இந்தியாவின் தொழில்நுட்ப பார்ட்னராக புனேவை சேர்ந்த ஏஜேபி குழுமம் (AJP Group) செயல்படவுள்ளது.

இந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி... படங்களில் மட்டுமே பார்த்த கார்களை இனி சாலையில் காணலாம்...

இதன் அடிப்படையில் தனது ஏஜே பெர்ஃபார்மென்ஸ் ஸ்டூடியோவில், இந்த டாப் எண்ட் கார்களை ஏஜேபி குழுமம் அசெம்பிள் செய்யவுள்ளது. முதல் மாடல்கள் நடப்பாண்டு இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் வெளி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விலை ரூ.2 கோடி என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி... படங்களில் மட்டுமே பார்த்த கார்களை இனி சாலையில் காணலாம்...

இதுகுறித்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள குழுமத்தின் முதன்மை இயக்கு அலுவலர் மனஸ் தீவன் கூறுகையில், ''ஏஜேபி குழுமம் கார்களை கஸ்டமைஸ் செய்யும். ஸ்டாண்டர்டான ஷெல்பி வாரண்டி வழங்கப்படும்.

இந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி... படங்களில் மட்டுமே பார்த்த கார்களை இனி சாலையில் காணலாம்...

ஷெல்பி இந்தியாவின் தொழில்நுட்ப பார்ட்னராக ஏஜேபி குழுமம் செயல்படும். நாங்கள் இந்தியாவில் கார்களை அசெம்பிள் செய்யவுள்ளோம். அத்துடன் தேவையான மாடிஃபிகேஸன்கள் மற்றும் அப்கிரேடுகளையும் செய்வோம். இந்த கார்களுக்கான மார்க்கெட்டிங் மற்றும் வினியோகம் ஆகியவற்றை ஷெல்பி இந்தியா கவனிக்கும்'' என்றார்.

இந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி... படங்களில் மட்டுமே பார்த்த கார்களை இனி சாலையில் காணலாம்...

ஏஜேபி குழுமமானது பார்ட்ஸ்களை அசெம்பிள் செய்வதில் மட்டுமல்லாது இதர தொழில்நுட்ப பணிகளிலும் உதவி செய்யும். ஷெல்பி கோப்ரா, ஷெல்பி சூப்பர் ஸ்னேக், ஷெல்பி ஜிடி350 மற்றும் ஜிடி500 போல், ஷெல்பி அவதாரத்தில் உள்ள பெரும்பாலான ஃபோர்டு கார்கள் மஸ்டாங் பிளாட்பார்மை பெற்றுள்ளன. மிகவும் புகழ்பெற்ற மாடல்களில் இவை குறிப்பிடத்தகுந்தவை.

இந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி... படங்களில் மட்டுமே பார்த்த கார்களை இனி சாலையில் காணலாம்...

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்தியா குறைந்தபட்சம் ஒரு மஸ்டாங் ஷெல்பி ஜிடி கார்களையாவது பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மார்க்கெட்டிற்கான திட்டங்கள் தற்போது தீட்டப்பட்டு வருகின்றன. இதுவரை நமக்கு விருப்பமான படங்களில் மட்டுமே பார்த்து வந்த ஷெல்பி மஸ்டாங் வேரியண்ட்களை இனி இந்திய சாலைகளிலும் நாம் காண போகிறோம்.

இந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி... படங்களில் மட்டுமே பார்த்த கார்களை இனி சாலையில் காணலாம்...

ஃபோர்டு மஸ்டாங் ஜிடி ஃபாஸ்ட்பேக்தான் (Ford Mustang GT Fastback) தற்போது இந்தியாவில் கிடைக்கும் ஃபோர்டு மஸ்டாங் மாடல் ஆகும். இதில், 5,0 லிட்டர் வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 396 பிஎச்பி பவர் மற்றும் 515 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

இந்தியாவிற்கு வருகிறது ஃபோர்டு ஷெல்பி... படங்களில் மட்டுமே பார்த்த கார்களை இனி சாலையில் காணலாம்...

இதில், 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கருப்பு, மேக்னடிக், சில்வர், ரேஸ் ரெட், ஆக்ஸ்போர்டு ஒயிட் மற்றும் ட்ரிபிள் யெல்லோ ட்ரை-கோட் என மொத்தம் 6 வண்ணங்களில் இந்த மாடல் கிடைக்கிறது.

Source: TOI

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Sunday, March 24, 2019, 14:21 [IST]
English summary
Talk To The Car Cause The Ear Can't Hear - Shelby GT Coming 2019. Read in Tamil
மேலும்... #ஃபோர்டு #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+