அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பிற்கும் காரணமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இதனால் ஆட்டோமொபைல் துறை தற்போது வரலாறு காணாத வகையில் தடுமாறி வந்தாலும், மத்திய அரசிடம் இருந்து உதவிக்கரம் நீளவில்லை.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை அதளபாலத்திற்கு சென்று விட்டது. நடப்பு 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2019), அனைத்து செக்மெண்ட் வாகனங்களின் உள்நாட்டு விற்பனையும் மிக கடுமையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. விற்பனை சரிவடையும் நேரத்தில் உற்பத்தி மட்டும் அதிகரிக்குமா என்ன?

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், அனைத்து செக்மெண்ட் வாகனங்களின் உற்பத்தியும் இரட்டை இலக்கத்தில் சரிவடைந்துள்ளது. இப்படி நடப்பது அனேகமாக இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் ஜிஎஸ்டி மூலம் வசூலான மொத்த தொகை 11,00,000 கோடி ரூபாய். இதில், ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு மட்டும் 10 சதவீதத்திற்கும் மேல். அதாவது சுமார் 1,20,000 கோடி ரூபாய்.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

இந்திய ஆட்டோமொபைல் துறையின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவர்களின் எண்ணிக்கை 37 மில்லியன். ஆனால் விற்பனை சரிவு என்ற தற்போதைய நிலை இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்தால், இவர்களில் பலர் வேலையிழப்பதுடன், பொருளாதார ரீதியிலான சவால்களும் ஏற்படும் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

இந்திய ஆட்டோமொபைல் துறையின் இந்த திடீர் தடுமாற்றத்திற்கு என்ன காரணம்? பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எரிபொருள் விலை உயர்வு, இன்சூரன்ஸ் பிரீமியம் உயர்வு என இதற்கு காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். வாகனங்களின் விலை உயர்வும் ஒரு காரணம்தான். மத்திய அரசு தற்போது பல்வேறு புதிய பாதுகாப்பு விதிமுறைகளை வரிசையாக அமல்படுத்தி வருகிறது.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதன்படி வாகனங்களில் ஏபிஎஸ், ஏர்பேக், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இப்படி பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

மத்திய அரசு குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு வசதிகளை வாகன உற்பத்தியாளர்கள் கட்டாயம் வழங்கிதான் ஆக வேண்டும். இதன் தாக்கம் வாகனங்களின் விலையில் எதிரொலித்தது. ஆம், வாகனங்களின் விலையை கணிசமாக உயர்த்தியாக வேண்டிய சூழ்நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். விலை உயர்ந்தால் விற்பனை சரிவது என்பது இயல்பான ஒன்றுதான்.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

மத்திய அரசு இன்னும் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளை வருங்காலங்களில் அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இதுதவிர பிஎஸ்-6 என்ற ரூபத்திலும் வாகன உற்பத்தியாளர்கள் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கான நாள் நெருங்கி கொண்டே வருகிறது. அது ஏப்ரல் 1, 2020.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

அதற்குள்ளாக பிஎஸ்-4ல் இருந்து பிஎஸ்-6க்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் மாறியாக வேண்டும். நாட்டின் சுற்றுச்சூழலை காக்கும் இந்த விஷயத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால் பிஎஸ்-6 விதிமுறைகள் காரணமாகவும் வாகனங்களின் விலை உயரவுள்ளது. குறிப்பாக டீசல் கார்களின் விலை 1 லட்ச ரூபாய் வரை உயரலாம் என கூறப்படுகிறது.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

எனவே வரும்காலங்களில் வாகனங்களின் விற்பனை இன்னும் சரிவடைந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. இதுபோன்ற திட்டங்களை குறை சொல்ல முடியாது என்றாலும், ஆட்டோமொபைல் துறையின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. தற்போது எக்ஸ்ட்ரீம் லெவலை எட்டிவிட்டது என சொல்லலாம்.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

மத்திய அரசு உடனடியாக சிறப்பு கவனம் கொடுத்து உதவிக்கரம் நீட்டாவிட்டால் நிலைமை அதோகதிதான். ஆனால் மத்திய அரசு அதற்கு தயாராக இல்லை என்றே சொல்லலாம். மத்திய அரசின் விருப்பம் எல்லாம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதுதான் இருக்கிறது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை உன்னிப்பாக கவனித்திருந்தால், இல்லை சாதாரணமாக கவனித்திருந்தால் கூட இது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும்.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

'பசுமை பட்ஜெட்' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பிரதமர் நரேந்திர மோடியே ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். அந்த அளவிற்கு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியிருந்தார் நிர்மலா சீதாராமன். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அள்ளி கொடுக்காவிட்டால் பரவாயில்லை, கிள்ளியாவது கொடுங்கள் என்பதுதான் ஆட்டோமொபைல் துறையின் எதிர்பார்ப்பு.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

ஆனால் மத்திய அரசு கிள்ளி கூட கொடுக்கவில்லை. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (Society of Indian Automobile Manufacturers - SIAM) மிக முக்கியமான கோரிக்கைகளில் ஒன்று.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

இண்ட்ஸ்ட்ரீ சரிவில் இருந்து மீண்டு வர இது உதவும் என்பது எஸ்ஐஏஎம் அமைப்பின் எண்ணம். ஆனால் இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகவில்லை. போதாக்குறைக்கு பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை வேறு நிர்மலா சீதாராமன் லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தி விட்டார். அது மட்டுமா? சில உதிரி பாகங்களுக்கான சுங்க வரியையும் சேர்த்தே உயர்த்தியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

சரி, மத்திய அரசின் திட்டம்தான் என்ன? ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட்டு விட்டு எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மாற வேண்டும். மாறியே ஆக வேண்டும். இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கும் ஃபேம்-2 திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு என பல்வேறு சலுகைகளை அள்ளி வீசுகிறது மத்திய அரசு.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

ஆட்டோமொபைல் துறையினரும் இதனை வரவேற்கின்றனர்தான். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது என்பது படிப்படியாக இருக்க வேண்டும் என்பதுதான். சுமூகமாக மாறுவதை விடுத்து விட்டு, உந்தி தள்ளக்கூடாது என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இனி தாமதிப்பதற்கு நேரமில்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

இந்த சூழலில் ஜிஎஸ்டியை குறைக்காததால் அதிர்ச்சியடைந்துள்ள எஸ்ஐஏஎம், மீண்டும் அரசிடம் சென்று முறையிட திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து எஸ்ஐஏஎம் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், ''ஜிஎஸ்டி குறைப்பை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஐசிஇ சார்ந்த இண்டஸ்ட்ரீ 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனால் எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை.

அள்ளி கொடுக்கல.. கிள்ளியாவது கொடுங்க: எஸ்ஐஏஎம்! மாறு.. இல்லாவிட்டால் மாற்றப்படுவாய்: மோடி சர்க்கார்!

எனவே நாங்கள் மீண்டும் அரசிடம் செல்ல போகிறோம். ஜிஎஸ்டியை குறைப்பது பற்றி மீண்டும் பரிசீலனை செய்யும்படி அவர்களிடம் வலியுறுத்த போகிறோம். சில நடவடிக்கைகளை எடுங்கள் என்றும் சொல்லப்போகிறோம். ஆட்டோமொபைல் விற்பனை குறைவாக இருந்தால், அதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் ஜிஎஸ்டி வரி வருவாயும் குறைந்து விடும்'' என்றார்.

Most Read Articles
English summary
SIAM Want Government To Reconsider GST Cut. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X