பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய திட்டம் ஒன்று புயலை கிளப்பியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மிக தீவிரமாக முயன்று வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. இதுதவிர பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

எனவே இவ்விரு பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே, பெட்ரோல் மற்றும் டீசல் வாகன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. அதற்கு பதில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது என்பதுடன், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைக்கவும் உதவி செய்யும்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

வரும் 2030ம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களாகவே இருக்க வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நல்ல முடிவுதான் என்றாலும், 2030ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்டுவது மிக கடினம் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

இந்த சூழலில் மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் இதற்கான அறிவிப்பு வெளியானது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அதற்கு முன்னதாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், எலெக்ட்ரிக் வாகன கடனுக்கான வட்டிக்கு வருமான வரியில் இருந்து சலுகை பெறும் அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நோக்கில் இந்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாயின.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

இந்த சூழலில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் பிரபலமாக்கும் வகையில் மிக கடுமையான திட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு வர மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் தற்போது வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளது. இதில், புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் புதுப்பிப்பு கட்டணங்களை பல மடங்கு உயர்த்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

புதிய நடுத்தர சரக்கு/பாசஞ்சர் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் தற்போதைய நிலையில் வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால் இதனை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதிய லாரி மற்றும் பஸ் ஆகிய வாகனங்களுக்கான பதிவு கட்டணம் தற்போது 1,500 ரூபாயாக மட்டுமே உள்ளது. இதனை அதிரடியாக 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

புதிய இரு சக்கர வாகனங்களுக்கான பதிவு கட்டணம் தற்போது வெறும் 50 ரூபாய்தான். ஆனால் இதனை ஆயிரம் ரூபாயாக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதிய கார்களுக்கு தற்போது உள்ள 600 ரூபாய் என்ற பதிவு கட்டணத்தை 5,000 ரூபாயாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவே மத்திய அரசு இப்படி ஒரு திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. ஆனால் இந்த முடிவு ஆட்டோமொபைல் துறையில் புயலை கிளப்பியுள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. பெட்ரோல், டீசலில் இயங்கும் கார், டூவீலர் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

எனவே மாருதி சுஸுகி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பலவும் வாகன உற்பத்தியை குறைத்து வருகின்றன. இந்த சரிவில் இருந்து ஆட்டோமொபைல் துறை மீண்டு வர வேண்டுமானால், மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மத்திய அரசு உதவி செய்யாவிட்டால், வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் முனைப்பில் உள்ள மத்திய அரசு இதற்கு உதவி செய்ய தயாராக இல்லை என்பது போலத்தான் தெரிகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. ஏனெனில் ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்டு கொண்டு வர இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (Society of Indian Automobile Manufacturers - SIAM) சில கோரிக்கைகளை முன்வைத்தது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

ஆனால் மத்திய அரசு அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதில், வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மிக முக்கியமானது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை இதனை நிறைவேற்றவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஆட்டோமொபைல் துறையினர் கடுமையாக அதிருப்தியடைந்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

இப்படிப்பட்ட சூழலில்தான் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு மற்றும் புதுப்பிப்பு கட்டணங்களை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வரும் தகவல் வெளியானது. இதற்கு இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தற்போது கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து எஸ்ஐஏஎம் தலைவர் ராஜன் வதேரா கூறுகையில், ''புதிய வாகனங்களுக்கான பதிவு கட்டணங்களை இதுபோல் உயர்த்தினால், அது மார்க்கெட் சூழ்நிலையை இன்னும் சீர்கெட செய்து விடும்'' என்றார்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு முடிவு கட்ட மோடி அரசின் அடுத்த அதிரடி.. புதிய திட்டம் புயலை கிளப்பியது

அத்துடன் ஆட்டோமொபைல் துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர எஸ்ஐஏஎம் ஏற்கனவே சில பரிந்துரைகளை செய்துள்ளது. புதிய வாகனங்களுக்கான பதிவு கட்டணங்களை உயர்த்துவதற்கு பதில் இந்த பரிந்துரைகளை அமலுக்கு கொண்டு வருவதில் இந்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் ராஜன் வதேரா கூறினார். ஏற்கனவே குறிப்பிட்டபடி மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. மத்திய அரசின் இத்தகைய திட்டங்கள் எத்தகையது? என்பது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.

Most Read Articles
English summary
SIAM Opposed New Vehicle Registration Fee Hike Draft Notification. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X