இந்தியா 2.0 ப்ராஜெக்ட்டிற்காக ரூ.120 கோடியை முதலீடு செய்யும் ஸ்கோடா நிறுவனம்!

முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் தனது ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக இந்நிறுவனம் ரூ.120 கோடியை முதலீடு செய்யவும் தீர்மானித்துள்ளது.

இந்தியா 2.0 ப்ராஜெக்ட்டிற்காக ரூ.120 கோடியை முதலீடு செய்யும் ஸ்கோடா நிறுவனம்!

தனது ஸ்கோடா பெயரின் டிசைனை மாற்றவும் முடிவெடுத்துள்ள இந்நிறுவனம் அதனை இந்தியாவில் 53 நகரங்களில் உள்ள கிளை கம்பெனிகளிலும் செய்ல்படுத்தவுள்ளது. இந்த திட்டத்திற்கு இந்தியா 2.0 என பெயரிட்டுள்ள ஸ்கோடா நிறுவனம், 63 விற்பனை மையம் மற்றும் 61 சர்வீஸ் சென்டர்களிலும் இந்த திட்டத்தினை மேற்கொள்ளவுள்ளது.

இந்தியா 2.0 ப்ராஜெக்ட்டிற்காக ரூ.120 கோடியை முதலீடு செய்யும் ஸ்கோடா நிறுவனம்!

இந்த புதிய சீரமைப்பு வேலைப்பாடுகளினால் ஸ்கோடா டீலர்ஷிப்களின் தரம், தெளிவாகவும் எளிமையாகவும் கொண்டுவரப்படவுள்ளது. மாடர்ன் டிசைன் லைட் கான்செப்ட்டில் வித்தியாசமான கலரில் ஷோரூம்கள் மேம்படுத்தப்படவுள்ளன.

இந்தியா 2.0 ப்ராஜெக்ட்டிற்காக ரூ.120 கோடியை முதலீடு செய்யும் ஸ்கோடா நிறுவனம்!

தரமான மெட்டிரீயல்களால் உருவான டீலர்ஷிப்களின் இணையத்தளங்கள், நம்பகத்தன்மையான பிரகாசமான காற்றோட்டமுள்ள சூற்றுச்சூழல் என வாடிக்கையாளர்கள் மையத்தை சிறப்பாக மாற்றவுள்ளது. ஷோரூம்களில் கிராபிக் மற்றும் மரத்திலான பொருட்களால் கட்டிடக்கலைகள் மேற்க்கொள்ளப்படவுள்ளன.

ஸ்கோடா நிறுவனத்தின் இயக்குனர் ஜாக் ஹோல்லிஸ் இதுபற்றி கூறுகையில், இந்தியாவில் டீலர்ஷிப்களின் வட்டாரத்தை வலிமையாக மாற்றவுள்ளோம். ஸ்கோடா நிறுவனம் அதன் சேனல் பார்ட்னர்களிடம் உத்தரவாத தன்மைகளுடன் பணியாற்றவுள்ளது. இந்த மேம்பாடுகள் அனைத்திற்கும் வாடிக்கையாளர்களின் கருத்துகளும் கேட்கப்படவுள்ளன.

இந்தியா 2.0 ப்ராஜெக்ட்டிற்காக ரூ.120 கோடியை முதலீடு செய்யும் ஸ்கோடா நிறுவனம்!

ஸ்கோடா நிறுவனத்தின் தத்துவமான, மக்களின் தொடர்புடன் கூடிய எளிமையான தெளிவு என்ற கருத்து இந்த செயல்பாடுகளில் இருக்கும். இந்த மேம்படுத்துதலில் கூடுதலாக, டீலர்ஷிப்களின் விற்பனை ஆலோசகர்களும் அவர்களது விற்பனை சாதனங்களுடன் பணியாற்றவுள்ளனர். இதனால் வாடிக்கையாளர்கள் ஸ்கோடா நிறுவனத்தின் மொத்த கார் வகைகளையும் பார்க்க முடியும். ஐகன்சல்டண்ட் என அழைக்கப்படும் இந்த சாதனத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கார்களின் மாடல்களை உட்கார்ந்த இடத்தில் இருந்தே காணலாம்.

Most Read:இந்தியாவில் களமிறங்கும் நியூ ரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட்டின் புகைப்படங்கள் கசிந்தன!

இந்தியா 2.0 ப்ராஜெக்ட்டிற்காக ரூ.120 கோடியை முதலீடு செய்யும் ஸ்கோடா நிறுவனம்!

மேலும் ஸ்கோடா நிறுவனம் அனைத்து பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த வகுப்புகளையும் நடத்தவுள்ளது. இந்த வகுப்புகளால் வாடிக்கையாளர்களின் கார் சர்வீஸின் போதும் பணியாளர்கள் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்வர். மேலும் கார் மாடல்களின் பட்டியல்களும் புதுமையான விதத்தில் மாற்றவுள்ளோம் என கூறினார்.

Most Read:மீண்டும் துவங்கும் வாடிக்கையாளர்களின் பேவரட் எம்ஜி ஹெக்டரின் புக்கிங்... எப்போது தெரியுமா?

இந்தியா 2.0 ப்ராஜெக்ட்டிற்காக ரூ.120 கோடியை முதலீடு செய்யும் ஸ்கோடா நிறுவனம்!

ஸ்கோடா நிறுவனம் இந்த இந்தியா 2.0 திட்டத்தில் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. இதன் நோக்கம், வாடிக்கையாளர்கள் ஸ்கோடா நிறுவனத்தின் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களை அணுகும்போது திருப்திகரமான மனநிலையை அடைய வேண்டும் என்பது தான். ஸ்கோடாவின் அடுத்த மாடல் அறிமுகத்திற்குள் இந்த இந்தியா 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடும் எனவும் கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Invests Rs 120 Crore For Rebranding Showrooms & Service Centres: Part Of INDIA 2.0 Project
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X