ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான கடன் திட்டம் அறிமுகம்!

ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு புதுமையான கடன் உதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை காணலாம்.

ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான நிதி திட்டம் அறிமுகம்!

ஸ்கோடா சூப்பர்ப் காருக்கான இந்த சிறப்பு திட்டமானது EasyBuy என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த திட்டத்தின்படி பல்வேறு அனுகூலங்களை வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்புள்ளது.

ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான நிதி திட்டம் அறிமுகம்!

ஸ்கோடா சூப்பர்ப் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த ஈஸிபை திட்டத்தை தேர்வு செய்தால், ஸ்கோடா ஃபைனான்சியல் சர்வீசஸ் நிதி நிறுவனத்தின் வாயிலாக முதல் மூன்று ஆண்டுகளுக்கு காரின் விலையில் 100 சதவீதம் அளவுக்கு கடன் பெற முடியும். இதில், 40 சதவீத கடனை மாதத் தவணையாக மாற்றி மூன்று ஆண்டுகளுக்கு செலுத்தலாம்.

ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான நிதி திட்டம் அறிமுகம்!

மூன்று ஆண்டுகள் முடிவில் காரை தொடர்ந்து பயன்படுத்த விரும்பாவிடில் காருக்கு 57 சதவீத விலை மதிப்புடன் திரும்ப ஒப்படைக்க முடியும். காரின் தேய்மானம், ஓடிய தூரத்திற்கான வரம்பு உள்ளிட்ட நிபந்தனைகளின்படி காரை ஸ்கோடா டீலர்களே திரும்ப பெற்றுக் கொள்வர். இதனால், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மதிப்பை பெற முடியும்.

ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான நிதி திட்டம் அறிமுகம்!

இந்த பைபேக் திட்டத்தின்படி, மூன்று ஆண்டுகளில் 45,000 கிமீ தூரம் வரை காரை வாடிக்கையாளர் பயன்படுத்த இயலும். இதைத்தாண்டி பயன்படுத்தினால், அதற்கு தக்கவாறு பைபேக் மதிப்பில் கழிவு செய்து கொண்டு காரை ஸ்கோடா பெற்றுக்கொள்ளும். உதாரணத்திற்கு, மூன்று ஆண்டுகளில் 50,000 கிமீ வரை பயன்படுத்தி இருந்தால் தோராயமாக ரூ.1 லட்சம் வரை கழிவு செய்யப்படும்.

ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான நிதி திட்டம் அறிமுகம்!

ஒருவேளை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு காரை தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், மீதமுள்ள தொகையை செலுத்தியோ அல்லது மறுகடன் பெற்று மாதத் தவணையில் திரும்ப செலுத்த முடியும். மேலும், ஈஸிபை திட்டத்தின்படி, புதிய ஸ்கோடா கார் வாங்கினால் இந்த பைபேக் மதிப்பை பயன்படுத்தி சிறப்பு தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை பெற முடியும்.

ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான நிதி திட்டம் அறிமுகம்!

இந்த பைபேக் திட்டத்தில் காரின் விலை ரூ.23.99 லட்சமாக இப்போது வாங்கினால் மூன்று ஆண்டுகள் கழித்து ரூ.13,67,430 என்ற மதிப்பில் காரை திரும்ப பெற்றுக் கொள்ளப்படும். அதாவது, காரின் மறுவிற்பனை மதிப்பாக இந்த தொகை கருதி திரும்ப பெறப்படும். இந்த திட்டத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ரூ.48,663 என்ற மாதத் தவணையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டி இருக்கும்.

ஸ்கோடா சூப்பர்ப் காருக்கு அட்டகாசமான நிதி திட்டம் அறிமுகம்!

இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மதிப்பை தரும் என்று ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் ஆர்வமுடன் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2019, 13:59 [IST]
English summary
Skoda Auto India announced an assured buyback program that is available across the entire Skoda Superb fleet. This program is available through Skoda Financial Services exclusively. This program called the 'EasyBuy' will allow customers to buy a new Skoda Superb against EMI values of a car from a lower segment. Customers can now get up to 100 per cent finance and up to 40 percent lower equated monthly installments for three years.
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+