ஸ்கோடா கோடியாக், ரேபிட் கார்களின் விலை அதிரடி குறைப்பு!

ஸ்கோடா கோடியாக் மற்றும் ரேபிட் கார்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா கோடியாக், ரேபிட் கார்களின் விலை அதிரடி குறைப்பு!

ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு யுக்திகளை கார் நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில், விலை குறைப்பு நடவடிக்கைகளில் கார் நிறுவனங்கள் இறங்கி உள்ளன. அந்த வகையில், ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தனது கார்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

ஸ்கோடா கோடியாக், ரேபிட் கார்களின் விலை அதிரடி குறைப்பு!

ஸ்கோடா கேடியாக் எஸ்யூவியின் ஸ்டைல் என்ற பெயரில் விற்பனையாகும் பேஸ் வேரியண்ட்டின் விலை ரூ.2.38 லட்சம் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை ரூ.36.78 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட கோடியாக் ஸ்டைல் வேரியண்ட் இனி ரூ.32.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

ஸ்கோடா கோடியாக், ரேபிட் கார்களின் விலை அதிரடி குறைப்பு!

மேலும், விலை குறைக்கப்பட்ட ஸ்டைல் வேரியண்ட்டானது கார்ப்பரேட் எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு கிடைக்கும். ஏற்கனவே, கார்ப்பரேட் எடிசன் மாடல்களானது பழைய ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்கு மட்டும் லாயல்டி போனஸ் அடிப்படையில் விலை குறைப்பு வழங்கப்பட்டது. ஆனால், இனி அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த விலையில் வாங்க முடியும்.

ஸ்கோடா கோடியாக், ரேபிட் கார்களின் விலை அதிரடி குறைப்பு!

ஸ்கோடா ரேபிட் காரின் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ஸ்டைல் பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ.1.16 லட்சம் வரையிலும், ஆம்பிஷன் என்ற டீசல் மேனுவல் வேரியண்ட விலை ரூ.1.30 லட்சம் வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, நேரடியாக விலை குறைப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா கோடியாக், ரேபிட் கார்களின் விலை அதிரடி குறைப்பு!

கோடியாக், ரேபிட் கார்களின் சில வேரியண்ட்டுகளுக்கு வழங்கப்படும் விலை குறைப்பு போலவே, சூப்பர்ப் செடான் காருக்கும் வழங்கப்படுகிறது. பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ஸ்டைல் வேரியண்ட்டானது ரூ.25.99 லட்சத்தில் கிடைத்து வருகிறது. இந்த வேரியண்ட்டின் விலை ரூ.1.80 லட்சம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

ஸ்கோடா கோடியாக், ரேபிட் கார்களின் விலை அதிரடி குறைப்பு!

இதேபோன்று, ஸ்கோடா சூப்பர்ப் டீசல் ஸ்டைல் வேரியண்ட்டின் விலையானது ரூ.30.29 லட்சத்திலிருந்து ரூ.28.49 லட்சமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு எந்த சேமிப்புச் சலுகைகளும் இப்போது இல்லை.

ஸ்கோடா கோடியாக், ரேபிட் கார்களின் விலை அதிரடி குறைப்பு!

ஸ்கோடா கோடியாக், ரேபிட், சூப்பர்ப் கார்களின் மீதான அதிரடியான விலை குறைப்பு பண்டிகை காலத்தில் விற்பனை ஊக்கம் பெறுவதற்கு உதவும் என்று ஸ்கோடா கருதுகிறது. மேலும், இருப்பில் உள்ள பிஎஸ்-4 மாடல்களை கூடிய விரைவாக விற்றுத் தீர்க்கும் விதத்திலும் இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கையை ஸ்கோடா மேற்கொண்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 17, 2019, 11:35 [IST]
English summary
Skoda Auto has reduced prices of three car models in India to boost sales during the festive season.
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+