புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் அறிமுகமாகிறது!
சக்திவாய்ந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2017ம் ஆண்டு ஸ்கோடா ஆக்டேவியா காரின் ஆர்எஸ் என்ற செயல்திறன் மிக்க மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சாதாரண மாடலைவிட அதிக கவர்ச்சியான விஷயங்கள் மற்றும் கூடுதல் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வில் இந்த கார் வந்தது.

இந்த நிலையில், இதனைவிட சக்திவாய்ந்த ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஆட்டோகார் இந்தியா செய்தி கூறுகிறது.

புதிய இறக்குமதி கொள்கையின்படி, இந்த காரை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கும் ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. அதாவது, 2,500 கார்களை எந்த மாற்றமும் செய்யாமல் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யலாம்.

இந்த சலுகையை பயன்படுத்தி, முதல்கட்டமாக 500 ஆக்டேவியா ஆர்எஸ்245 கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய ஸ்கோடா முடிவு செய்துள்ளது. வரவேற்பை பொறுத்து கூடுதலாக கார்களை இறக்குமதி செய்யும் திட்டமும் உள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 241 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இந்த காரில் 18 அங்குல அலாய் வீல்கள், ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் ஆகியவை வழங்கப்படுகின்றன. செயல்திறனை அதிகப்படுத்துவதற்கான விசேஷ ஸ்போர்ட் மோடும் உள்ளது. இந்தத காரில் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
MOST READ: மேஜிக் டெக்னாலஜி உடன் மாருதி சுஸுகி பலேனோ கார்... என்னவென்று தெரியுமா?

ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், மெமரி வசதியுடன் கூடிய ஓட்டுனர் இருக்கை அட்ஜெஸ்ட் வசதி உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும், பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் இடம்பெற்றிருக்கின்றன. செயல்திறன் மிக்க செடான் காரை விரும்புவோருக்கு இந்த கார் மிகச் சிறந்த தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications