ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு விலையில் ரூ.1.58 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா ரேபிட் கார் விளங்குகிறது. ஆனால், ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவையின் தரம் காரணமாக, இந்த காரின் விற்பனை எண்ணிக்கையில் பின்தங்கி உள்ளது.

ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

இந்த நிலையில், ஸ்கோடா ரேபிட் காரின் மதிப்பை கூட்டும் விதத்தில், ரூ.1.58 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. ஸ்கோடா ரேபிட் டீசல் காரின் சில வேரியண்ட்டுகளின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 30ந் தேதி வரை இந்த தள்ளுபடியுடன் கூடிய சிறப்பு விலையில் கிடைக்கும்.

ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

ஸ்கோடா ரேபிட் டீசல் மாடலுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும். ஸ்கோடா ரேபிட் டீசல் காரின் ஆக்டிவ் வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் ரூ.10.06 லட்சத்தில் கிடைத்து வந்தது. தற்போது ரூ.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ரூ.1.06 லட்சம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

ரேபிட் டீசல் ஆம்பிஷன் வேரியண்ட்டினஅ மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது ரூ.11.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. இனி ரூ.10 லட்சம் விலையில் கிடைக்கும். ரூ.1.30 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

ரேபிட் டீசல் ஸ்டைல் வேரியண்ட்டின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலுக்கு ரூ.12.74 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மாடல் ரூ.11.16 லட்சத்தில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டுக்குத்தான் அதிகபட்சமாக ரூ.1.58 லட்சம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

ரேபிட் டீசல் ஆம்பிஷன் வேரியண்ட்டின் ஆட்டோமேட்டிக் மாடலானது ரூ.12.50 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இனி ரூ.11.36 லட்சம் விலையில் கிடைக்கும். ரூ.1.14 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

அதேபோன்று, ஸ்டைல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.14 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த வேரியண்ட் ரூ.12.44 லட்சத்தில் கிடைக்கிறது. ரூ.1.56 லட்சம் வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது.

ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

ஸ்கோடா ரேபிட் காரில் 110பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் வர இருக்கின்றன.

ஸ்கோடா ரேபிட் டீசல் காருக்கு ரூ.1.58 லட்சம் தள்ளுபடி... மிஸ் பண்ணிடாதீங்க!

இதற்கு தக்கவாறு இந்த டீசல் எஞ்சினை மேம்படுத்தும் நிலை இருக்கிறது. ஆனால், இந்த எஞ்சினை புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு மேம்படுத்துவதற்கான திட்டம் ஸ்கோடா ஆட்டோ வசம் இல்லை. எனவே, இந்த எஞ்சின் பொருத்தப்பட்ட ரேபிட் கார் அடுத்த சில மாதங்களில் விற்பனையில் இருந்து நீக்கப்பட இருக்கிறது. எனவேதான், இருப்பு இருக்கும் கார்களை விற்றுத் தீர்ப்பதற்கு அதிகபட்ச தள்ளுபடிகளை ஸ்கோடா அறிவித்துள்ளதாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 16, 2019, 16:20 [IST]
English summary
Skoda has announced offers and discounts across Active MT, Ambition MT and other trims of the Rapid model. The offers and discounts are running for a limited period only, and will cease to be available after November.
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+