அசத்தும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையிலும், மொனாக்கோவில் நடைபெறும் மான்ட்டி கார்லோ ராலி ரேஸ் பந்தயத்தில் ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் அம்சங்களுடன் இந்த புதிய மான்ட்டி கார்லோ எடிசன் மாடலானது ஸ்க

தனித்துவமான அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்கோடா ரேபிட் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அசத்தும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையிலும், மொனாக்கோவில் நடைபெறும் மான்ட்டி கார்லோ ராலி ரேஸ் பந்தயத்தில் ஸ்கோடா நிறுவனத்தின் பாரம்பரியத்தை பரைசாற்றும் அம்சங்களுடன் இந்த புதிய மான்ட்டி கார்லோ எடிசன் மாடலானது ஸ்கோடா ரேபிட் காரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம்!

ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் மாடலில் ஃப்ளாஷ் ரெட் என்ற விசேஷ சிவப்பு வண்ணத்தில் வந்துள்ளது. க்ரில் அமைப்பு, கூரை, சைடு மிரர்கள் ஆகியவை விசேஷ கருப்பு வண்ணத்தில் கவர்ச்சிகரமாக இருக்கிறது.

அசத்தும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம்!

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பி பில்லர் கருப்பு வண்ணத்தில் உள்ளது. இந்த காரில் 16 அங்குல க்ளப்பர் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருப்பு வண்ணத்திலான டிஃபியூசர், கருப்பு வண்ண டெயில்கேட் ஸ்பாய்லர் அமைப்பும், கருப்பு வண்ண ரூஃப் ரெயில்களும் இடம்பெற்றுள்ளன.

அசத்தும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம்!

உட்புறம் முழுவதுமாக கருப்பு வண்ண தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், அலுமினிய பெடல்கள், இருக்கைகளில் சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடுகள் அலங்கரிக்கின்றன.

அசத்தும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம்!

இந்த காரில் 6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் மிரர் லிங்க் ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதியை அளிக்கும்.

அசத்தும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம்!

இந்த காரில் ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், டூயல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்டு அசிஸ்ட், த்ரீ பாயிண்ட் சீட் பெல்ட் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

அசத்தும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம்!

புதிய ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும். இந்த காரில் இருக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 105 பிஎச்பி பவரையும், 153 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

அசத்தும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம்!

புதிய ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் கார் ரூ.11.16 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. இது பார்ப்பதற்கு மிக கவர்ச்சிகரமாகவும், தனித்துவமான அம்சங்களை பெற்றிருப்பதால் வாடிக்கையாளர்களை கவரும் என்று கருதப்படுகிறது.

அசத்தும் அம்சங்களுடன் ஸ்கோடா ரேபிட் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம்!

கடந்த 2017ம் ஆண்டு ஸ்கோடா ரேபிட் காரின் மான்ட்டி கார்லோ எடிசன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மான்ட்டி கார்லோ தொடர்பான காப்புரிமை பிரச்னை காரணமாக வெறும் 2 மாதங்களில் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்த எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 14, 2019, 11:07 [IST]
English summary
Skoda has launched the 2019 Rapid Monte Carlo edition in India at a starting price of Rs 11.16 lakh, ex-showroom (Delhi). The Monte Carlo edition of the Rapid will offer a number of unique features and equipment both to its exterior and interiors.
மேலும்... #ஸ்கோடா #skoda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+