நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் வெளியீடு!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஸ்கோடா சூப்பர்ப் செடான் கார் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் முழுவதுமான எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ள. விருப்பப்படியும், கால நிலைகளுக்கு தக்கவாறும் இந்த ஹெட்லைட்டின் பிரகாசத்தில் மாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரில் நவீன தொழில்நுட்பத்திலான பிரிடிக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. விண்ட்ஸ்கிரீனில் உள்ள கேமரா மூலமாக வேக வரம்பு உள்ள பகுதிகள், வளைவுகளை கண்டறிந்து வேகத்தை தானியங்கி முறையில் இதன் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் குறைத்துக் கொள்ளும்.

பல் தடங்களை கொண்ட விரைவு சாலைகளில் வேகமாக செல்லும்போது அவசர நிலை ஏற்பட்டால், காரை தானாக சாலை ஓரத்திற்கு கொண்டு சென்று நிறுத்தும் எமர்ஜென்சி அசிஸ்ட் தொழில்நுட்பமும் உள்ளது. அடுத்தடுத்த தடங்களில் வரும் வாகனங்களை கண்காணித்து காரை பாதுகாப்பாக நிறுத்தும்.

சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்குவதற்காக ரியர் ஆக்சில் சஸ்பென்ஷனில் விசேஷ கவர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், காரின் நிலைத்தன்மை மேம்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் பிளக் இன் ஹைப்ரிட் மாடலிலும் வர இருக்கிறது. இந்த காரில் இருக்கும் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து 215 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். மின் மோட்டார் மூலமாக 55 கிமீ தூரம் பயணிக்கலாம். லித்தியம் அயான் பேட்டரியானது தரைதளத்தில் சேஸீயில் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் டிசைனிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பம்பரின் நீளம் 8 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. க்ரில் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்லன. 18 மற்றும் 19 அங்குல அலாய் வீல்கள் கொடுக்கப்படுகின்றன.

உட்புறத்தில் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் கதவுகளில் க்ரோம் அலங்கார ஆக்சஸெரீகள் உள்ளன. அலங்கார தையல் வேலைப்பாடுகளுடன் அல்கான்ட்ரா லெதர் இருக்கைகள் உள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 8.0 அங்குல, 9.3 அங்குல தொடுதிரைகள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சாதனைகளை தேர்வு செய்யும் வாய்ப்பும் உள்ளது.

இன்பில்ட் சிம் கார்டு வசதியும் கொடுக்கப்படுகிறது. இதன்மூலமாக நேரடி இணைய தள வசதியை பெற்றிருக்கிறது. மேலும், பல்வேறு வசதிகளையும், தகவல்களையும் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக பெறும் வாய்ப்பும் உள்ளது.
அடுத்த ஆண்டு இரண்டாவது பாதியில் இந்தியாவில் புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் விற்பனக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








