மீண்டும் மூடப்படும் ஃபோக்வேகனின் புனே தொழிற்சாலை... இதுதான் காரணம்...

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் மத்தியில் இருந்து அடுதற்கடுத்த ஜனவரி மாதம் மத்தியில் வரையில் ஒரு மாத காலத்திற்கு புனேவில் உள்ள தனது சாகான் தொழிற்சாலையை மூட முடிவெடுத்துள்ளது. இதற்கான காரணத்தை இந்த செய்தி பார்ப்போம்.

மீண்டும் மூடப்படும் ஃபோக்வேகனின் புனே தொழிற்சாலை... இதுதான் காரணம்...

ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் தனது தயாரிப்பை முடக்குவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் மாத மத்தியில் இருந்து இந்த மாத மத்தியில் வரை தனது தொழிற்சாலையில் வாகனங்கள் தயாரிப்பதை நிறுத்தியிருந்தது.

மீண்டும் மூடப்படும் ஃபோக்வேகனின் புனே தொழிற்சாலை... இதுதான் காரணம்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இவ்வாறான செயலுக்கு, ஃபோக்ஸ்வேகனின் வெளிநாட்டு சந்தை தொடர்ந்து சரிந்து வருவதும், இந்தியாவில் இந்நிறுவனத்தின் கார்களின் விற்பனை குறைந்து வருவதும் காரணங்களாக பார்க்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்நிறுவனத்தின் டீசல் வேரியண்ட்களின் தயாரிப்பு நிறுத்தம் மற்றும் அமியோ செடான் கார்களின் தயாரிப்பால் நிறுவனம் அடைந்துவரும் தொடர் வீழ்ச்சியும் இந்த தயாரிப்பு நிறுத்தத்திற்கு காரணங்களாகும்.

மீண்டும் மூடப்படும் ஃபோக்வேகனின் புனே தொழிற்சாலை... இதுதான் காரணம்...

இதனால் வருடத்திற்கு கிட்டத்தட்ட 1 லட்ச கார்களை தயாரித்து வெளியிடும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த சாகான் தொழிற்சாலை இந்த வருடத்தில் சுமார் 15 சதவீதம் குறைந்து 85000 யூனிட் கார்களை மட்டும் தான் தயாரித்துள்ளது.

மீண்டும் மூடப்படும் ஃபோக்வேகனின் புனே தொழிற்சாலை... இதுதான் காரணம்...

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் நிலவரம் இவ்வாறு இருக்க, சில வாடிக்கையாளர்களோ, இந்நிறுவனம் தனது தொழிற்சாலையில் எம்க்யூபி ஃப்ளாட்ஃபாரத்தை கட்டமைப்பதற்காக தான் இவ்வாறு தயாரிப்புகளை நிறுத்துகிறது என கூறுகின்றனர். எம்க்யூபி ஃப்ளாட்ஃபாரத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கட்டமைப்பு இந்தியாவில் எந்த நிறுவனத்தின் தொழிற்சாலையிலும் இல்லை.

மீண்டும் மூடப்படும் ஃபோக்வேகனின் புனே தொழிற்சாலை... இதுதான் காரணம்...

அவர்கள் கூறுவதும் நம்பும்படியாக தான் உள்ளது. ஏனெனில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சாகான் தொழிற்சாலையில் உள்ள பிக்யூ25 ஃப்ளாட்ஃபாரத்தின் திறன் படிப்படியாக குறைந்து கொண்டு வருகிறது. இதன் காரணமாக இந்நிறுவனம் எம்க்யூ ஃப்ளாட்ஃபாரத்தை தனது தொழிற்சாலையில் கட்டமைத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.

மீண்டும் மூடப்படும் ஃபோக்வேகனின் புனே தொழிற்சாலை... இதுதான் காரணம்...

இவ்வாறு அடிக்கடி தயாரிப்புகளை நிறுத்துவதினால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கடந்த இரண்டு மாத விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கார்களின் இறக்குமதியில் 11 சதவீத வீழ்ச்சியை இந்நிறுவனம் 2019 ஏப்ரல்- அக்டோபர் கால இடைவெளியில் அடைந்துள்ளது. இருப்பினும் இந்நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதி இந்த வருடத்தில் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மீண்டும் மூடப்படும் ஃபோக்வேகனின் புனே தொழிற்சாலை... இதுதான் காரணம்...

விற்பனை வீழ்ச்சியை தவிர்ப்பதற்காக ஃபோக்ஸ்வேகன் அடுத்த ஆண்டின் மத்தியில் புதிய தலைமுறை எம்க்யூபி ஃப்ளாட்ஃபாரத்திற்கு மாறவுள்ளது. இதற்கு முன்னதாக அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்நிறுவனம் ஸ்கோடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியா 2.0 ப்ராஜெக்ட்டில் பணியாற்றவுள்ளது. இந்த புதிய எம்க்யூபி ஃப்ளாட்ஃபாரத்தால் ஃபோக்ஸ்வேகனின் மாடல்கள் அடுத்த ஆண்டின் மத்தியில் இருந்து எந்தவொரு கால தாமதமும் இன்றி வாடிக்கையாளர்களை சென்று சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் மூடப்படும் ஃபோக்வேகனின் புனே தொழிற்சாலை... இதுதான் காரணம்...

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கடந்த மாதத்தில் பஸாத் மாடலின் விற்பனையை நிறுத்தியிருந்த நிலையில், இந்த மாத துவக்கத்தில் இருந்து அமியோ மாடலின் தயாரிப்பையும் நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்நிறுவனத்தின் பிரபலமான மாடல்களான போலோ, வெண்டோ மற்றும் ராபிட் மாடல்கள் மட்டும் தான் தற்போதைக்கு பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, November 30, 2019, 18:37 [IST]
English summary
Skoda-Volkswagen Factory Shut Down
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+