பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

பெற்றோருக்கு மிகவும் சர்ப்ரைஸாக சூப்பர் கார் ஒன்றை பரிசளித்து மகன் அசத்தியுள்ளார். இந்த காரின் விலை எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியமடைவது உறுதி.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கு சர்ப்ரைஸாக ஏதேனும் ஒன்றை பரிசளிப்பதில் கிடைக்கும் சுகமே தனி. அதிலும் நாம் உழைத்து சம்பாதித்த பணத்தில், அவர்களுக்கு விலை உயர்ந்த ஒரு பரிசை வாங்கி கொடுக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆர்யனும் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவர்தான். தனது பெற்றோருக்கு ஏதேனும் ஒரு விலை உயர்ந்த பரிசை சர்ப்ரைஸாக கொடுக்க வேண்டும் என ஆர்யன் நீண்ட நாட்களாக யோசித்து கொண்டே இருந்தார்.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

அப்போது புதிய ஆடி காரை அவர்களுக்கு பரிசாக வழங்கினால் என்ன? என்ற சிந்தனை அவருக்கு உதித்தது. உடனடியாக ஆர்யன் அதனை நிறைவேற்றியும் காட்டி விட்டார். ஆம், புத்தம் புதிய ஆடி ஆர்8 (Audi R8) காரை, தனது பெற்றோருக்கு பரிசாக வழங்கி அசத்தியுள்ளார் ஆர்யன்.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

அதுவும் மிகவும் விலை உயர்ந்த ஆடி ஆர்8 சூப்பர் காரை, மிகவும் சர்ப்ரைஸான முறையில் பரிசளித்து, தனது பெற்றோரை அவர் நெகிழ செய்துள்ளார். அத்துடன் இதனை வீடியோவாகவும் ஆர்யன் பதிவு செய்து கொண்டார்.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

முதலில் டிரக் ஒன்றில், ஆடி ஆர்8 கார் ஆர்யனின் வீட்டிற்கு வந்திறங்குகிறது. டாங்கோ ரெட் மெட்டாலிக் (Tango Red Metallic) வண்ணம் கொண்ட இது லேட்டஸ்ட் ஜென்ரேஷன் ஆடி ஆர்8 காராகும். ஆனால் காரில் நம்பர் பிளேட் இல்லை.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஷோரூமில் இருந்து கார் நேரடியாக ஆர்யனின் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டிருப்பதை இது உணர்த்துகிறது. முன்னதாக டிரக்கில் இருந்து கீழே இறக்கப்பட்ட ஆடி ஆர்8 கார், ஆர்யனுடைய வீட்டிற்கு வெளியே பார்க்கிங் செய்யப்பட்டு விட்டது.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

பின்னர் வீட்டிற்குள் சென்ற ஆர்யன், பெற்றோர்களின் கண்களை தனது கைகளால் மூடியபடியே அவர்களை மெதுவாக வெளியே அழைத்து வந்தார். வெளியே வந்தவுடன் அவர் கைகளை எடுத்து விட்டார். இதன்பின் கண்களை திறந்து பார்த்த ஆர்யனின் பெற்றோர், ஆடி ஆர்8 காரின் அழகில் மயங்கி விட்டனர்.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

பின்னர் புதிய காரில் அவர்களை ஏற்றிக்கொண்டு அப்படியே ஒரு ரவுண்டு அடித்து விட்டு வந்தார் ஆர்யன். மகன் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு காரணமாக, அவரது பெற்றோர் நெகிழ்ச்சியடைந்தனர்.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதில், குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒன்றும் அடங்கியுள்ளது. சரியாக தனது தந்தையின் பிறந்த நாளன்று, ஆடி ஆர்8 காரை சர்ப்ரைஸாக வழங்கியுள்ளார் ஆர்யன். இப்படி ஒரு மகன் கிடைக்க அவரது பெற்றோர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

பொதுவாக ஆடி கார்கள் மிகவும் விலை உயர்ந்தவை என்பது அனைவரும் அறிந்ததுதான். அதிலும் ஆடி ஆர்8 காரின் விலை மிகவும் அதிகம். ஆர்யன் தனது பெற்றோருக்கு பரிசாக வழங்கியிருப்பது ஆடி ஆர்8 காரின் டாப் வேரியண்ட்டான வி10 பிளஸ் (V10 Plus) ஆகும்.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இந்திய மார்க்கெட்டில் ஆடி ஆர்8 வி10 பிளஸ் காரின் விலை 2.72 கோடி ரூபாய்!!! இது எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஆன் ரோடு வருகையில் விலை இன்னும் அதிகமாகும். ஆடி ஆர்8 காரின் லேட்டஸ்ட் வெர்ஷன் இந்திய மார்க்கெட்டில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இதில், 5,204 சிசி, வி10 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 602 பிஎச்பி பவர் மற்றும் 560 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தி சாலைகளில் சீறிப்பாயும் வல்லமை வாய்ந்தது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் இந்த கார் எட்டி விடும்.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

இது ஆடி ஆர்8 வி10 பிளஸ் காரின் ஃபேஸ்லிஃப்டுக்கு முந்தைய மாடல் (Pre-Facelift) ஆகும். சர்வதேச மார்க்கெட்டில், ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதமே ஆடி நிறுவனம் வெளியிட்டு விட்டது.

பெற்றோருக்கு சர்ப்ரைஸாக சூப்பர் கார் பரிசளித்த மகன்... விலை எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி...

ஆனால் இந்த புதிய மாடலானது இந்திய மார்க்கெட்டில் நடப்பாண்டில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Source: THE HASSAN ROADSTERS

More from DriveSpark

Article Published On: Tuesday, January 22, 2019, 18:04 [IST]
English summary
Son Gifts Parents A New Audi R8 Supercar Worth Rs.2.72 Crore. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+