திருமண தின கொண்டாட்டத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற மகன் செய்த சிறப்பான சம்பவத்தை பாருங்கள்: வீடியோ!
பெற்றோர்களின் திருமண தினத்தை மறக்க முடியாத நாளாக மாற்ற, அவர்களின் மகன் சிறப்பான சம்பவத்தை செய்துள்ளார். இதுகுறித்து தற்போது வைரலாகும் வீடியோ குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாடா நிறுவனத்தின் ஹாரியர் கார் இந்தியச் சந்தையில் மிகவும் பிரபலமான மாடலாக இருக்கின்றது. இந்த காரை அந்த நிறுவனம் கடந்த ஜனவரி மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. எஸ்யூவி ரக கார்களுக்கு எப்போது இந்தியச் சந்தையில் மவுசு அதிகம். அந்தவகையில், ஒவ்வொரு மாதமும் 2000-த்திற்கும் மேற்பட்ட டாடா ஹாரியரின் யூனிட்கள் இங்கு விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில், டாடா நிறுவனத்தின் இந்த சிறப்பான காரை, தந்தையின் திருமண தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அவரது மகனும், மருமகளும் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளனர். இதுகுறித்த வீடியோவை ஜாப்ரோ என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.
இந்த பரிசு வழங்கும் நாளை தனது தந்தை வாழ்நாள் முழுவதும் மறக்காத வண்ணம் இருக்கும் வேண்டும் என எண்ணிய அவர், அதற்கான ஏற்பாடுகளை முன்னதாகவே செய்து முடித்திருந்தார். அந்தவகையில், திருமண தினத்தன்று, தாய் தந்தை இருவரையும் காலை உணவிற்காக வெளியே அழைத்துச் சென்றனர் அந்த இளம் தம்பதியினர்.

அவ்வாறு, காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்த புறப்பட்ட அந்த குடும்பத்தினர், நேராக ஓர் கேக் ஷாப்பிற்குள் நுழைந்தனர். அங்கு கேக்கை கட் செய்து கொண்டாடிய அவர்கள், கடையை விட்டு வெளியேறுகின்றனர்.

ஆனால், அதற்கு முன்னதாகவே, தனது தாய் தந்தை இருவருக்கும் தெரியாத வண்ணம், ஏற்கனவே டாடா டீலரின் ஊழியர்கள் ஹாரியர் காரைக் கொண்டு வந்து கடையின் வாசல் முன்பு நிறுத்தி வைத்துவிட்டனர்.

இதுகுறித்து சற்றும் அறியாத அவரின் தந்தை சாதாரணாக வெளியே வருகிறார். மேலும், முன்னதாக கால் டாக்ஸி மூலம் கடைக்கு வந்ததால், வீட்டிற்கு திரும்புவதற்கும் டாக்ஸி வந்திருப்பதாக எண்ணி அவர் வெளியே வருகிறார்.

அப்போது, தனது மகனின் நண்பர்கள் அங்கு கேமிராவைக் கொண்டு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அதேசமயம், அவர்களுக்கு முன்பாக அவர்களையே பார்த்தவாறு பலர் நின்றுக் கொண்டிருக்க, புதிய காரைப் பார்த்து மலைத்துபோய் நின்றார். அந்த நேரத்தில்தான், புதிய ஹாரியர் கார் அவர்களுக்காக வாங்கியிருப்பது தெரியவந்தது.

ஆச்சரிய பரிசைப் பார்த்து மெய்மறந்துபோன, இருவரும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதில், அவரின் தாய் கண்கள் கலங்கும் காட்சி, நம் கண்களிலும் கண்ணீரை வரவழைப்பதைப்போன்று இருக்கின்றது.
"தன் வாழ்நாள் முழுவதையும் பிள்ளைகளுக்காகவே செலவழிக்கும் பெற்றோர்களுக்கு இதுபோன்ற பரிசினை வழங்கி மகிழ்விப்பது பிள்ளைகளான நமது கடமை" என அவரின் மகன் தெரிவித்தார்.

டாடா நிறுவனத்தின் இந்த ஹாரியர் கார் மாடர்ன் லுக்கிலான 2.0 டிசைன் தீமைப் பெற்றிருக்கின்றது. இது, கார் சாலையில் செல்லும்போது, மிகவும் ரம்மியமான தோற்றத்தை வெளிப்படுத்த உதவுகிறது. இந்த கார் தற்போது, டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றது. அதேபோன்று இதில், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் அம்சமும் இடம்பெறவில்லை.

டாடா ஹாரியர் காரின் ஆரம்ப விலை 12.69 லட்சம் ரூபாயாக இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த காருக்கு அதீத சக்திய வழங்கும் விதமாக, 2.0 லிட்டர் கேஆர்ஒய்ஓடிஇசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








