7,000 கார்களை வாங்கி குவித்த 'பரம ஏழை'... இவற்றின் விலை தெரிந்தால் ஹார்ட் அட்டாக்கே வந்து விடும்...

ஒரு கார் வாங்கவே பலர் திண்டாடி கொண்டிருக்கும் சூழலில், தங்கத்தால் உருவாக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் உள்பட மொத்தம் 7,000 கார்களை ஒருவர் வாங்கி குவித்துள்ளார். இவற்றின் மொத்த விலை எவ்வளவு என தெரிந்தால் ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

வாழ்க்கையில் ஒரு சிறிய காரையாவது சொந்தமாக வாங்கி விட வேண்டும் என்ற கனவு நம்மில் பலருக்கும் நிச்சயமாக இருக்கும். ஆனால் சிறியதாக கருதப்படும் இந்த கனவை கூட பெரும்பாலானோரால் நிறைவேற்ற முடியாமல் போய் விடுகிறது.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

அப்படிப்பட்டவர்கள் எல்லாம் ஒரு நிமிடம் ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள். ஏனெனில் இங்கே ஒருவர் தான் அணியும் உடையின் நிறத்திற்கு மேட்ச் ஆகும் நிறமுடைய கார்களை மட்டுமே பயன்படுத்தும் வித்தியாசமான பழக்கத்தை வைத்துள்ளார்.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

புருனே நாட்டின் சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா என்பவர்தான் அவர். மிகவும் ஆடம்பரமான முறையில் வாழ்க்கை நடத்தி வரும் ஹஸ்ஸனல் போல்கியா, கார்களை வாங்குவதில், அதுவும் குறிப்பாக விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

இவரிடம் 604 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளன! உலகிலேயே அதிக ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருக்கும் நபர் என்ற பெருமைக்கும், சாதனைக்கும் சொந்தக்காரர் ஹஸ்ஸனல் போல்கியாதான். இதுமட்டுமல்லாமல் அவரிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கை அனுமார் வால் போல் நீண்டு கொண்டே செல்கிறது.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

574 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களையும், 452 ஃபெராரி கார்களையும், 382 பென்ட்லீ கார்களையும், 209 பிஎம்டபிள்யூ கார்களையும், 179 ஜாகுவார் கார்களையும் புருனே சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா சொந்தமாக வைத்துள்ளார்.

MOST READ: மீண்டும் எழுந்து நடக்க முடியாத நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த மரண அடி இதுதான்...

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

கொஞ்சம் இளைப்பாறி கொள்ளுங்கள். இதுதவிர 21 லம்போர்கினி கார்களும், 11 அஸ்டன் மார்டின் கார்களும் ஹஸ்ஸனல் போல்கியாவிடம் உள்ளன. ஆக மொத்தம் ஹஸ்ஸனல் போல்கியாவிடம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது!

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

புருனே சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியாவிடம் உள்ள மொத்த கார்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 2.78 லட்சம் கோடி ரூபாய்!!! கார்களை வாங்குவதற்காக மட்டும் இவ்வளவு தொகையை செலவிட்ட உலகின் ஒரே நபர் நிச்சயமாக ஹஸ்ஸனல் போல்கியாவாக மட்டுமே இருக்க முடியும்.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

ஹஸ்ஸனல் போல்கியாவின் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடம் 10 கால்பந்து மைதானங்களை காட்டிலும் மிகப்பெரியது! அவரிடம் உள்ள கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று 24 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

இந்திய மதிப்பில் இந்த காரின் விலை மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய். சொந்தமாக ஒரு கார் கூட வாங்க முடியாமல் பலர் தவித்து கொண்டிருக்கும் சூழலில், இப்படிப்பட்டவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர்.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

ஹஸ்ஸனல் போல்கியா போன்றவர்கள் ஆடம்பரத்திற்காக தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களை கொண்டு, கார்களை அலங்கரித்து வருகின்றனர். அதே சமயம் விளம்பரத்திற்காக இதனை செய்யும் கலாச்சாரமும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ: மோடிக்கு எதிராக சித்து விளையாட்டை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு... பாஜக அதிர்ச்சியடைய காரணம் இதுதான்

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

இதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதுதான் டாடா நானோ கோல்டு ப்ளஸ் (Tata Nano GoldPlus) கார். டாடா நானோ கோல்டு ப்ளஸ் கார் உருவாக்கப்பட்டதன் பின்னணியும் கூட சுவாரஸ்யமானதுதான்.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு கார் வழங்க வேண்டும் என்ற டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவின் கடும் முயற்சியால் உருவான கார்தான் நானோ. நானோ கார் குறித்த அறிவிப்பை ரத்தன் டாடா வெளியிட்டபோது, பல மேற்கத்திய நாடுகள் அவரை ஏளனம் செய்தன.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

ஆனால் ஒரு லட்ச ரூபாய்க்கு கார் வழங்கியே தீருவது என்ற தனது கனவு திட்டத்தில் ரத்தன் டாடா மிகவும் உறுதியாக இருந்தார். இதன் விளைவாக டாடா நானோ கார் விற்பனைக்கு வந்தது. அத்துடன் உலகில் விற்பனையாகும் மிக மலிவான விலை கொண்ட கார்களில் ஒன்றாகவும் உருவெடுத்தது.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

நானோ குறித்த அறிவிப்பு வெளியானபோது, 3 லட்சம் முன்பதிவுகள் குவிந்தன. ஆனால் பல காரணங்களால் முதலில் முன்பதிவு செய்திருந்த ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே 1 லட்ச ரூபாய் என்ற விலையில் நானோ கார் வழங்கப்பட்டது. ஆனால் அதன்பின் அதன் விலை உயர்ந்தது எல்லாம் தனிக்கதை.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

முன்னதாக இந்தியாவின் நகை தயாரிப்பு பாரம்பரியம் 5 ஆயிரம் ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக, மிக விலை உயர்ந்த உலோகங்களை கொண்டு, டாடா நானோ காரை வடிவமைத்தது கோல்டு ப்ளஸ் ஜூவல்லரி நிறுவனம்.

MOST READ: அமெரிக்காவிற்கு ஷாக் கொடுத்த 2 இந்திய இளைஞர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

இதில், 80 கிலோ தங்கம் (22 காரட்), 15 கிலோ வெள்ளி மற்றும் வைரம், மாணிக்க கற்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இதன் காரணமாக இந்த டாடா நானோ கோல்டு ப்ளஸ் காரின் விலை 22 கோடி ரூபாய்களாக உயர்ந்தது.

இவரிடம் உள்ள கார்களின் விலை மட்டும் 2,78,10,00,00,000 ரூபாய்! இந்த 'ஏழை' பற்றி தெரிந்தால் ஷாக் உறுதி

ஆனால் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக நானோ கோல்டு ப்ளஸ் கார் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். விளம்பரத்திற்காக மட்டுமே தங்கம், வைரம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டது.

Tamil
English summary
Sultan Of Brunei Hassanal Bolkiah Car Collection. Read in Tamil
 
X

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more