சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

புதிய தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பபட இருப்பது தெரிய வந்துள்ளது.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி வெளிநாடுகளில் ஜிம்னி என்ற அடக்க வகை எஸ்யூவி மாடலை விற்பனை செய்து வருகிறது. ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்த இந்த புத்தம் புதிய மினி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

இந்த நிலையில், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கார் அண்ட் பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

இந்தியாவில் மிக நீண்ட காலமாக இருந்து வரும் மாருதி சுஸுகி ஜிப்ஸி எஸ்யூவிக்கு மாற்றாக புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஜிப்ஸி பெயரில்தான் விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

மேலும், வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் மாடலைவிட இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் மாடலின் வடிவம் சற்றே பெரிதாக இருக்கும் என்றும் தெரிகிறது. இதற்காக, சில மாற்றங்களுடன் இந்தியாவில் புதிய தலைமுறை ஜிப்ஸி மாடலாக ஜிம்னி வர இருக்கிறது.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

சுஸுகி ஜிம்னி சியாரா மாடலில் பயன்படுத்தப்படும் எஞ்சின், கியர்பாக்ஸ் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மாடலிலும் பயன்படுத்தப்படும்.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பிரிமீயம் வகை மினி எஸ்யூவி மாடலாக நிலைநிறுத்தப்படும்.

MOST READ: புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வருகிறது தமிழக அரசு! முதல்வர் எடப்பாடியின் அதிரடியால் மக்கள் உற்சாகம்

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

வெளிநாடுகளில் சுஸுகி ஜிம்னி சியாரா எஸ்யூவி 3 கதவுகள் பொருத்தப்பட்ட மாடலாக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 5 கதவுகள் பொருத்தப்பட்ட மாடலாக மாற்றங்கள் செய்யப்பட்டு ஜிப்ஸி பிராண்டில் வர இருக்கிறது.

MOST READ: பாண்டியா சகோதரர்களுக்கு உச்சத்தில் குரு... ஹர்திக் வாங்கியதாக கூறப்படும் புதிய காரின் விலை தெரியுமா?

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

அதேநேரத்தில், புதிய தலைமுறை சுஸுகி ஜிம்னி எஸ்யூவி இந்தியாவில் 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை பெற்றிருக்கும். இதனால், வரிச்சலுகை பெறுவதற்கான வாய்ப்பையும் பெற இயலும்.

MOST READ: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வாங்கிய புதிய காரின் விலை ரூ.11 கோடி... மலைக்க வைக்கும் பின்னணி...

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

புதிய சுஸுகி ஜிம்னி எஸ்யூவியில் 1.5 லிட்டர் கே-15 சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இதே எஞ்சின்தான் எர்டிகா, சியாஸ் கார்களில் பயன்படுத்தப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

சுஸுகி ஜிம்னி எஸ்யூவி மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

குஜராத்தில் உள்ள சுஸுகி கார் ஆலையில் புதிய தலைமுறை மாருதி ஜிப்ஸி கார் உற்பத்தி செய்யப்படும். இந்த புதிய மினி எஸ்யூவியை மிக சவாலான விலையில் இந்தியாவில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Maruti Suzuki has reportedly confirmed the arrival of the globally-acclaimed Jimny mini-SUV for the Indian market. According to carandbike, the Suzuki Jimny is said to go on sale in the Indian market sometime before the end of 2019.
Story first published: Tuesday, August 20, 2019, 9:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X