2019 சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

2019 சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக் இந்தியாவில் முதல்முறையாக விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இந்த பைக் சுஸுகி வி- ஸ்ட்ரோம் 1000 பைக்கின் அடிப்படையிலான டிசைன் தாத்பரியங்களுடன் வந்ததால், வாடிக்கையாளர்களை கவர்ந்ததது.

2019 சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், அரசு விரைவில் அமலுக்கு கொண்டு வர இருக்கும் புதிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, தற்போது ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் வசதியுடன் இந்த பைக் மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2019 சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

தவிர, ஹசார்டு இண்டிகேட்டர் மற்றும் புதிய சைடு ரிஃப்ளெக்டர் வசதியுடன் வந்துள்ளது. புதிய சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக் சாம்பியன் யெல்லோ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.

2019 சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக்கில் 645சிசி வி- ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 62 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கியர்பாக்ஸ் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

2019 சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த பைக்கில் முன்புறத்தில் சாதாரண வகை டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

2019 சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

அதேபோன்று, முன்சக்கரத்தில் 310 மிமீ விட்டமுடைய இரண்டு டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்சக்கரத்தில் 260 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது.

2019 சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.ரூ.7.46 லட்சம் என்ற அதே டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் தொடர்ந்து கிடைக்கும் என்று சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2019 சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி ஏபிஎஸ் பைக் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய சுஸுகி வி ஸ்ட்ரோம் 650எக்ஸ்டி பைக் நடுத்தர வகை பிரிமீயம் பைக் மாடல்களில் சிறந்த அட்வென்ச்சர் டூரர் மாடலாக விளங்குகிறது. கவாஸாகி வெர்சிஸ் 650 மாடலுடன் இந்த பைக் நேரடியாக மோதுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 29, 2019, 10:17 [IST]
English summary
Suzuki Motorcycles India has launched their 2019 V-Strom 650XT ABS in India. The prices for the new 2019 model remains unchanged at Rs 7.46 lakh, ex-showroom (Delhi). However, the 2019 model does come with a number of subtle updates along with a few additional features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+