யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

பெட்ரோல், டீசல் வாகனங்களால் இந்தியாவிற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் சில சமயங்களில் கிடுகிடுவென உயர்ந்து விடுகிறது. தற்போது கூட கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

சவுதி அரேபிய அரசு நடத்தி வரும் சவுதி அராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் ஆலைகள் மீது ஆள் இல்லாத விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலால், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவில் இதன் தாக்கம் எதிரொலிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் விலை இதுபோன்று சில சமயங்களில் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விடுவதால், வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது மத்திய அரசும் பாதிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் அதிகப்படியான தொகையால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதே இதற்கு காரணம்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதன் மூலமாக பெட்ரோல், டீசல் வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்னைக்கும் முடிவு கட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகம். எனவே பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வாரி வழங்கி வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது இதற்கு ஓர் உதாரணம்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மிக தீவிரமாக எடுத்து வருகின்றன. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு ஆரம்பத்தில் சற்று பின்தங்கியிருந்தது.

MOST READ: போலீஸ் நடத்திய வாகன சோதனையில் சாப்ட்வேர் இன்ஜினியர் உயிரிழந்ததால் அதிர்ச்சி... காரணம் என்ன தெரியுமா?

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

இத்தனைக்கும் 'ஆசியாவின் டெட்ராய்டு' என வர்ணிக்கப்படும் சென்னையை தன்னகத்தே கொண்டிருப்பது தமிழகம்தான். சென்னை நகரை சுற்றி, இந்தியா மற்றும் உலகின் பல்வேறு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவேதான் 'ஆசியாவின் டெட்ராய்டு' என்ற அடைமொழியை சென்னை பெற்றுள்ளது.

MOST READ: டயர்கள் கருப்பு நிறத்தில் இருப்பது ஏன் தெரியுமா? இந்த உண்மை தெரிந்தால் கண்டிப்பா நம்ப மாட்டீங்க...

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

இருந்தபோதும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க தேவையான பெரிய அளவிலான அறிவிப்புகள் எதையும் தமிழக அரசு வெளியிடாமல் இருந்து வந்தது. ஆனால் இந்த குறைகள் அனைத்தையும் தமிழக அரசு தற்போது போக்கியுள்ளது. ஆம், எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான மிக முக்கியமான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

MOST READ: பெட்ரோல் பங்க்கில் ஒவ்வொரு முறையும் எப்படி ஏமாற்றப்படுகிறீர்கள் தெரியுமா? அதிர வைக்கும் மோசடி

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

தமிழக அரசின் புதிய மின்சார வாகன கொள்கை இன்று (செப்டம்பர் 16) வெளியிடப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் சில முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

இதில், தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதன்படி வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு வழங்கப்படும்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

இதுதவிர தமிழக அரசின் புதிய எலெக்ட்ரிக் வாகன கொள்கையில், மற்றொரு முக்கியமான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு 15 சதவீதம் முதலீட்டு மானியமாக அளிக்கப்படவுள்ளது. தமிழக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக மின்சார வாகனங்களின் விலை குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளவர்கள் மத்தியில், இந்த அறிவிப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நடவடிக்கையால், தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

தமிழகத்தில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். குறிப்பாக பேருந்து போன்ற பொது போக்குவரத்து முறையை மின்சார மயமாக மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் சோதனை அடிப்படையில் எலெக்ட்ரிக் பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னையில் எலெக்ட்ரிக் பஸ் சேவையை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறிப்பிட்டபடி தங்கள் மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதில் பல்வேறு மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

நமது அண்டை மாநிலமான ஆந்திராவை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம். ஆந்திராவில் எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்குவதில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு முயற்சிகளை எடுத்தார். தற்போதைய முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியும் அதனை பின்பற்றி வருகிறார்.

யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு... மாஸ் காட்டிய எடப்பாடி பழனிச்சாமி...

அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசும் தற்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இது பாராட்ட வேண்டிய ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க முயலும் தமிழக அரசின் நடவடிக்கைகள் தொடர்பான கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Most Read Articles

English summary
Tamil Nadu Government's New Electric Vehicle Policy Announced: 100% Tax Exemption For EVs Manufactured In The State. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X