டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம்!

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் எப்போது அறிமுகமாக இருக்கிறது என்பது குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம்!

கடந்த ஆண்டு நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 45எக்ஸ் என்ற பெயரில் புதிய ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாடல் தற்போது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம்!

இந்த கார் வடிவமைப்பிலும், தொழில்நுட்ப வசதிகளிலும் அசத்தலாக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில், இந்த புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கார்தேக்கோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம்!

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா ஹாரியர் உருவாக்கப்பட்ட அதே ஒமேகார்க் பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய காரும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த பிளாட்ஃபார்மில் டாடா உருவாக்கி அறிமுகப்படுத்தும் இரண்டாவது கார் மாடல் என்பதும் அதிக எதிர்பார்ப்புக்கு காரணம்.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம்!

புதிய டாடா 45எக்ஸ் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் பெட்ரோரல் எஞ்சின் மற்்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும் 170 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும்.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம்!

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்படும் என்பது முக்கிய விஷயமாக இருக்கும்.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம்!

புதிய டாடா 45எக்ஸ் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், மேனுவல் டே-நைட் ரியர் வியூ மிரர், புஷ் பட்டன் ஸ்டார்ட், தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்டீயரிங் வீல் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற்றிருக்கும்.

டாடாவின் புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அறிமுக விபரம்!

புதிய டாடா 45எக்ஸ் கார் ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ, ஃபோக்ஸ்வேகன் போலோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு நேரடி போட்டி மாடலாக இருக்கும். விலை மிக சவாலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருப்பதும், அதிக இடவசதி கொண்டதாக வரும் என்பதும் இந்த காரின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 26, 2019, 11:36 [IST]
English summary
Tata Motors is said to working towards introducing another new product in the Indian market. This time, the company will be launching their all-new premium hatchback offering (codenamed 45X) this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+