டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கியது

டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கியது

கடந்த 3ந் தேதி ஜெய்சால்மர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் டாடா அல்ட்ராஸ் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து, மீடியா டிரைவ் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், டாடா அல்ட்ராஸ் கார் வாடிக்கையாளர்களை கவரும் ஏராளமான அம்சங்களை பெற்றிருப்பது குறித்து எமது டெஸ்ட் டிரைவ் செய்தியில் வழங்கி இருந்தோம்.

இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் காருக்கு டீலர்களில் முன்பதிவு அதிகாரப்பூர்வமான முறையில் துவங்கி இருக்கிறது. ஆன்லைன் மூலமாகவும், டீலர்கள் வாயிலாகவும் அல்ட்ராஸ் காரை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கியது

ரூ.21,000 முன்பணமாக செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். அடுத்த மாதம் இந்த கார் விற்பனைக்கு வர இருப்பதுடன் அதைத்தொடர்ந்து டெலிவிரி கொடுக்கும் பணிகளும் துவங்க இருக்கின்றன.

டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கியது

புதிய டாடா அல்ட்ராஸ் கார் அல்ஃபா என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவா்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டமைப்புக் கொள்கையின்படி, இலகு எடையுடன் அதிக உறுதியான கட்டமைப்புடன் கார்களை உருவாக்குவதே டாடா மோட்டார்ஸ் நோக்கமாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்படும் கார்கள் சிறந்த கையாளுமையை வழங்கும்.

டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கியது

டாடா அல்ட்ராஸ் கார் இம்பேக்ட் 2.0 என்ற டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய வடிவமைப்புக் கொள்கையின் கீழ் பல்வேறு நவீன அம்சங்களுடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், மிகவும் கவர்ச்சிகரமாகவும், தனித்துவமான அழகையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

MOST READ: ஜனாதிபதி வந்த நேரத்தில் பழுதாகி நின்ற லாரி... போலீஸ் செய்த காரியம் தெரிந்தால் அசந்து போயிருவீங்க...

டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கியது

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு செயலிகளை இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சப்போர்ட் செய்யும்.

MOST READ: மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கியது

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 82 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 90 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை பொருத்தப்பட்டு இருக்கும். முதலில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

MOST READ: ஃபாஸ்ட் டேக்கின் உதவியால் காணாமல்போன கார் 5 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு... எப்படி தெரியுமா..?

டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக துவங்கியது

புதிய டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Tata Altroz bookings now open in India. Tata Motors has officially started accepting pre-bookings for the upcoming premium hatchback in the Indian market. The company recently released a new teaser video confirming the start of bookings as well.
Story first published: Friday, December 27, 2019, 11:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X