டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சின் தேர்வில் அறிமுகமாகிறது!

புதிய டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சினுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சின் தேர்வில் அறிமுகமாகிறது!

அடுத்த ஆண்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், சிறிய வகை டீசல் எஞ்சின் கார்களின் உற்பத்தியை நிறுத்துவதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சின் தேர்வில்தான் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தள உறுப்பினரின் பதிவு தெரிவிக்கிறது.

டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சின் தேர்வில் அறிமுகமாகிறது!

நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் சிறிய மாறுதல்களை செய்து அல்ட்ராஸ் காரில் பயன்படுத்த உள்ளது டாடா மோட்டார்ஸ். நெக்ஸான் எஸ்யூவியில் 108 பிஎச்பி பவரையயும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் இந்த 1.5 லிட்டர் எஞ்சின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சின் தேர்வில் அறிமுகமாகிறது!

ஆனால், அல்ட்ராஸ் காரில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 91 பிஎச்பி பவரையும், 210 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கும். டாடா அல்ட்ராஸ் காரில் பயன்படுத்தப்பட இருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்பதே முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சின் தேர்வில் அறிமுகமாகிறது!

டாடா அல்ட்ராஸ் காரில் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் பின்னர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் அல்ட்ராஸ் காரிலும் இடம்பெறும். இந்த எஞ்சின் 100 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும்.

டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சின் தேர்வில் அறிமுகமாகிறது!

டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல் மாடல் சற்று கால தாமதப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டாலும், சில விசேஷ தொழில்நுட்ப அம்சங்களுடன் வர இருக்கிறது. ஆம், பெட்ரோல் மாடலில் மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட மாடலும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுக்கும் வாய்ப்புள்ளது.

டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சின் தேர்வில் அறிமுகமாகிறது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையின் அடிப்படையில் அல்ட்ராஸ் கார் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஹாரியருக்கு அடுத்து டாடா நிறுவனத்தின் அல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இரண்டாவது கார் மாடல் இது.

டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சின் தேர்வில் அறிமுகமாகிறது!

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்ட்டர், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.

டாடா அல்ட்ராஸ் கார் முதலில் டீசல் எஞ்சின் தேர்வில் அறிமுகமாகிறது!

வரும் ஜூலை மாதம் புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் கார்களுடன் போட்டி போடும். போட்டியாளர்களைவிட குறைவான விலையில் வரும் வாய்ப்புள்ளதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles
English summary
According to reports, The engine that the Altroz may feature is a de-tuned version of the 1.5-litre Revotorq turbocharged four-cylinder engine that currently sits in the Tata Nexon. Maximum power is expected to be set at a much lower 91bhp from the original 108bhp.
Story first published: Thursday, May 9, 2019, 14:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X