பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்?

டாடா அல்ட்ராஸ் காரில் பவர்ஃபுல் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது ஒமேகா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட டாடா ஹாரியர் காரை கடந்த ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் இம்பேக்ட் டிசைன் 2.0 தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த எஸ்யூவி ரக கார் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்?

இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் அல்ட்ராஸ் கார் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரும் டாடா மோட்டார்ஸின் இம்பேக்ட் டிசைன் 2.0 தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டது. ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார் மாடல்களுடன் இந்த கார் போட்டி போடும்.

பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்?

இந்த காரில் ஏராளமான நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. 7.0 அங்குல ஃபளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம், டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இன்டீரியரின் முக்கிய அம்சமாக இருக்கும். இதுதவிர, எல்இடி பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை எதிர்பார்க்கும் விஷயங்கள்.

பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்?

ஆனால், இதுவரை புரியாத புதிராக இருப்பது டாடா அல்ட்ராஸ் காரில் இடம்பெற இருக்கும் எஞ்சின் ஆப்ஷன்கள்தான். ஆம். இதுவரை டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் இடம்பெறும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. டாடா நெக்ஸான் எஸ்யூவியில் வழங்கப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளது.

பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்?

இதுதவிரவும், டாடா டியாகோ மற்றும் டீகோர் ஜேடிபி மாடல்களில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்?

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்படும். ஜேடிபி பிராண்டில் வெளிவரும் மாடலில் கூடுதல் ஆக்சஸெரீகள் இடம்பெறும் என்று தெரிகிறது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் கூடுதல் அலங்கார அம்சங்களுடன் கவரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்?

அதிக செயல்திறனை பெறுவதற்காக புதிய ஏர் இன்டேக் அமைப்பு, மேம்படுத்தப்பட்ட ஸ்டீயரிங் அமைப்பு, எரிபொருள் செலுத்தும் முறை, வால்வு டைமிங் மற்றும் புகைப்போக்கி அமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

பவர்ஃபுல் எஞ்சினுடன் வருகிறது டாடா அல்ட்ராஸ் கார்?

டாடா அல்ட்ராஸ் காரின் ஜேடிபி மாடலானது மாருதி பலேனோ ஆர்எஸ், ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். போட்டியாளர்களைவிட விலை சவாலாக இருக்கும் என்பதால், இந்த காருக்கு வரவேற்பு சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
Accroding to media reports, Tata Altroz Car may get JTP version in India soon.
Story first published: Thursday, April 25, 2019, 14:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X