புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டீசர்... புதிய அம்சங்கள் குறித்த விபரம்!

புதிய டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவு அறிவிப்பை வெளியிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட டீசர் ஆட்டோமொபைல் தளங்கள் மூலமாக கசிந்துள்ளது. மேலும், இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவலும் இந்த டீசர் மூலமாக தெரிய வந்துள்ளது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டீசர்... புதிய அம்சங்கள் குறித்த விபரம்!

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு எதிராக பார்க்கப்படும் புதிய டாடா அல்ட்ராஸ் கார் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய கார் குறித்து வாடிக்கையாளர்களிடம் ஆவலைத் தூண்டும் விதத்தில் டீசர் வெளியிடப்பட்டு வருகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டீசர்... புதிய அம்சங்கள் குறித்த விபரம்!

இந்த நிலையில், முன்பதிவு துவங்குவதற்காக உருவாக்கப்பட்ட டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே, ஆட்டோமொபைல் தளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த டீசரில் முன்பதிவு மிக விரைவில் துவங்குவதற்கான வாய்ப்பு இருப்பது மட்டுமில்லாமல், சில முக்கிய அம்சங்கள் குறித்தும் தெரிய வந்துள்ளது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டீசர்... புதிய அம்சங்கள் குறித்த விபரம்!

அதன்படி, கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் வைக்கப்பட்டு இருந்த அதே டேஷ்போர்டு அமைப்புடன் இந்த கார் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. புதிய டாடா அல்ட்ராஸ் காரில் ஆம்பியன் லைட்டிங் சிஸ்டம் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. பல விதமான வண்ணங்களில் இந்த லைட் சிஸ்டம் செயல்படும். இது பயண அனுபவத்தை உன்னதமாக்கும்.

கூகுள் வாய்ஸ் அசிஸ்ட் லோகோவுடன் டீசர் முடிகிறது. எனவே, இதில், கூகுளின் வாய்ஸ் கமாண்ட் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருப்பது தெரிய வருகிறது. ஸ்டீயரிங் வீலில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதிக்கான பட்டன்களையும் காண முடிகிறது. அனலாக் ஸ்பீடோமீட்டர் மற்றும் டிஜிட்டல் டாக்கோமீட்டர் ஆகியவையும் இடம்பெற்றிருக்கிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டீசர்... புதிய அம்சங்கள் குறித்த விபரம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இந்த காரின் முன்புற கதவுகளை 90 டிகிரி கோணத்தில் திறக்கும் வாய்ப்பு இருப்பதும் டீசர் மூலமாக தெரிய வந்துள்ளது. இதனால், உள்ளே பயணிகள் ஏறி, இறங்குவதற்கு மிக இலகுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டீசர்... புதிய அம்சங்கள் குறித்த விபரம்!

இந்த காரின் தொழில்நுட்ப ரீதியிலான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த காரில் 85 எச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்ர் பெட்ரோல் எஞ்சின், 102 எச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 90 எச்பி பவரை வழங்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டீசர்... புதிய அம்சங்கள் குறித்த விபரம்!

மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. பின்னர், ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் வசதியை அளிக்கும் கியர்பாக்ஸ் தேர்வும் அறிமுகம் செய்யப்படும். மைலேஜ் விபரங்களும் வெளியாகவில்லை. போட்டியாளர்களுக்கு இணையான அல்லது அதிக மைலேஜை வழங்கும் வகையில் இந்த எஞ்சின்கள் ட்யூனிங் பெற்றிருக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டீசர்... புதிய அம்சங்கள் குறித்த விபரம்!

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலைப்பட்டியலில் எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் மிக முக்கிய புதிய கார் மாடலாகவும் வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகிறது.

Source: AutoTech India

Most Read Articles
English summary
Tata Altroz premium hatchback car teaser has been leaked online and it shows various new features and details about the upcoming hatchback.
Story first published: Monday, July 29, 2019, 17:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X