அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்துகிறது டாடா!

அடுத்து ஒரு மின்சார கார் கான்செப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த இருக்கிறது. விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்துகிறது டாடா!

அடுத்த தசாப்தமானது மின்சார கார்களுக்கான யுகத்தின் துவக்கப் புள்ளியாக அமைய இருக்கிறது. இதற்கு தக்கவாறு, பட்ஜெட் கார் நிறுவனங்கள் முதல் பகட்டான கார் தயாரிப்பாளர்கள் வரை பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களை தயாரித்து அறிமுகம் செய்வதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர்.

அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்துகிறது டாடா!

இந்த நிலையில், நம் நாட்டின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், மின்சார கார்களை தொடர்ந்து களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் மின்சார கார்களை தயாரித்து வரும் அந்நிறுவனம் விரைவில் பல புதிய மின்சார கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்துகிறது டாடா!

அந்த வகையில், நாளை துவங்கி நடைபெற இருக்கும் ஜெனிவா சர்வதேச மோட்டார் ஷோவில் புத்தம் புதிய மின்சார கார் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. டாடா நிறுவனத்தின் புதிய 7 சீட்டர் எஸ்யூவி மற்றும் அல்ட்ராஸ் என்ற பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்கள் இந்த மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது நாம் ஏற்கனவே செய்தி வழங்கி இருந்தோம்.

அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்துகிறது டாடா!

இந்த சூழலில், அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான புத்தம் புதிய மின்சார காரின் கான்செப்ட் மாடலை ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்த இருக்கிறது டாடா மோட்டார்ஸ். இந்த புதிய கான்செப்ட்டின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்துகிறது டாடா!

காரின் முன்பகுதியில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் மின்சார வாகனம் என்று பொருள்படும் வகையில் EV என்ற பேட்ஜ் முன்புற க்ரில் அமைப்பில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் மின்மோட்டார் மற்றும் டிரான்ஸ்மிஷன் அமைப்பு பற்றிய தகவல்களை டாடா மோட்டார்ஸ் விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது.

அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்துகிறது டாடா!

டாடா அல்ட்ராஸ் காரின் தயாரிப்பு நிலை மாடலானது பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருப்பது தெரிந்ததே. இந்த நிலையில், அதன் மின்சார கான்செப்ட் மாடலையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருப்பது கார் ரசிகர்களின் ஆவலை எகிறச் செய்துள்ளது.

அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்துகிறது டாடா!

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் டாடா அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் மாடலானது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, புதிய டாடா அல்ட்ராஸ் கார் நடப்பு ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அல்ட்ராஸ் அடிப்படையிலான மின்சார கார் கான்செப்ட்டை அறிமுகப்படுத்துகிறது டாடா!

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட 45எக்ஸ் கான்செப்ட்டின் அடிப்படையிலான தயாரிப்பு நிலை மாடல்தான் அல்ட்ராஸ். அதன் அடிப்படையில் தற்போது மின்சார கார் மாடலும் வர இருக்கிறது.

Most Read Articles
English summary
Tata Motors has released a new teaser of the upcoming Altroz EV concept. The Tata Altroz EV concept will be showcased at the 2019 Geneva Motor Show, starting from 5th March 2019.
Story first published: Monday, March 4, 2019, 15:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X