டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடல் அறிமுகம் எப்போது?

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடல் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை காணலாம்.

டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடல் அறிமுகம் எப்போது?

கடந்த மாதம் ஜெனிவாவில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில் டாடா அல்ட்ராஸ் கார் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. அத்துடன், டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடலின் கான்செப்ட்டும் நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு வந்த பார்வையாளர்களை இந்த மின்சார மாடல் வெகுவாக கவர்ந்தது.

டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடல் அறிமுகம் எப்போது?

இந்த நிலையில், புதிய டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடல் 2020ம் ஆண்டு செப்டம்பரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக எக்கனாமிக் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கான்செப்ட் மாடலில் இருந்து தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடல் அறிமுகம் எப்போது?

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல் மாடலை போலவே இருக்கிறது. டிசைனில் பெரிய மாற்றங்கள் இப்போதைக்கு தெரியவில்லை. பெட்ரோல் காரில் இருக்கும் ரேடியேட்டர் க்ரில் அமைப்புக்கு பதிலாக பேனல் மூலமாக மறைக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்டுகள், பனி விளக்குகள் உள்ளிட்டவை ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடல் அறிமுகம் எப்போது?

மேலும், டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல் மாடலில் இடம்பெறும் அத்தனை வசதிகளும் மின்சார மாடலிலும் இடம்பெறும். ஆனால், பேட்டரியில் இருக்கும் மின் திறன் அளவு மற்றும் மின் மோட்டார் இயக்கம் குறித்த தகவல்களை எளிதாக பெறும் விதத்தில் எம்டிஐ திரை கொடுக்கப்பட்டு இருக்கும். மேலும், அனைத்து வசதிகளும் நிரம்பிய ஒரே வேரியண்ட்டாக மின்சார மாடல் அறிமுகப்படுத்தப்படும்.

டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடல் அறிமுகம் எப்போது?

புதிய டாடா அல்ட்ராஸ் மின்சார மாடலில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடல் அறிமுகம் எப்போது?

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் முதல் 300 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். குயிக் சார்ஜர் மூலமாக நீண்ட தூர பயணங்களையும் சாத்தியமாக்க வாய்ப்புள்ளது. எனவே, வாடிக்கையாளர்களை தன்பால் ஈர்க்கும் என்று நம்பலாம்.

டாடா அல்ட்ராஸ் காரின் மின்சார மாடல் அறிமுகம் எப்போது?

புதிய டாடா அல்ட்ராஸ் மின்சார கார் மாடல் ரூ.10 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், நிச்சயம் கார் மார்க்கெட்டை அதகளப்படுத்தும் என்று நம்பலாம். டாடா அல்ட்ராஸ் மட்டுமின்றி, டாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார மாடலையும் டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2019, 16:45 [IST]
English summary
Tata Motors is also going to launch an all-electric version of Altroz premium hatchback by the month of September next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+