டாடா அல்ட்ராஸ் காரின் உட்புற தொழிற்நுட்பங்கள் குறித்த தகவல் வெளியானது...
புதிய அல்ட்ராஸ் மாடலை அடுத்த வருடத்தில் ஜனவரி மாதத்தில் அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில் அல்ட்ராஸ் காரின் உட்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பங்கள் குறித்த தகவல்கள் வெளி வந்துள்ளன.

இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் காரின் கேபின்கள் க்ரே மற்றும் கருப்பு நிறத்தில் உள்ளன. டேஸ்போர்ட்டின் மேற்புறத்தில் சில்வர் நிறத்தில் பார்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அல்ட்ராஸ் மாடலின் டாப் வேரியண்டான அல்ட்ராஸ் இசட்எக்ஸ்+ செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஓட்டுனர் இருக்கையை தேவையான உயரத்திற்கு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதி, முன்புற மற்றும் பின்புற பயணிகளுக்கு ஆர்ம் ரெஸ்ட் போன்றவற்றுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆனால் கைகளுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் இந்த ஆர்ம் ரெஸ்ட்டிற்கு கீழ், தண்ணீர் பாட்டில்கள் அல்லது குளிர்பான பாட்டில்கள் வைக்கும் வகையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. முன்புறத்தின் மத்தியில் தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கு இடம் உள்பட நிறைய வெற்றிடமான பகுதிகள் உள்ளன. கேபின் பின்புறத்திலும் ஏசி கொடுக்கப்பட்டுள்ளது. 12 வோல்ட் சார்ஜிங் போர்ட்ஸ் போன்றவையும் உள்ளன.

விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த அல்ராஸ் மாடலில் டாடா நிறுவனம் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களை பொருத்தியுள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான இந்த இரு என்ஜின் தேர்வுகளுடன் டாடா நிறுவனம் டியாகோ மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் ஏற்கனவே கொடுத்துள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை தேர்வையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ப்ரீமியம் ஹேட்ச்பேக் மாடலை டாடா நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்துவுள்ளது. இதன் அறிமுகம் ஹோண்டா ஜாஸ், ஹூண்டாய் எலைட் ஐ20, டொயோட்டா க்ளான்ஸா மற்றும் மாருதி சுசுகி பலேனோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு அல்ட்ராஸின் டீசரை வெளியிட்டிருந்தது. இந்த டீசர் மூலம் அல்ட்ராஸ் காரின் வெளிப்புறங்கள் தங்க நிறத்தில் உள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்த டீசரையும் அதன் மூலம் வெளிவந்த முழு தகவல்களையும் அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

2020 ஜனவரியில் அறிமுகமாகவுள்ள இந்த அல்ட்ராஸ் கார் முன்னதாக அடுத்த மாதம் அதாவது டிசம்பரின் மத்தியில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த தாமதத்திற்கு காரணம், டாடா நிறுவனம் முதலில் இந்த காரை பிஎஸ்4 என்ஜினுடன் தான் அறிமுகப்படுத்துவதாக இருந்தது, ஆனால் தற்போது பிஎஸ்6 என்ஜின்களுடன் இந்த கார் அறிமுகமாகவுள்ளது. இதனால் இதன் முதல் டெலிவரியே பிஎஸ்6 என்ஜினுடன் தான் இருக்கும்.

தற்சமயம் அறிமுகமாகி வரும் அனைத்து கார்களும் சுத்தமான மற்றும் அகலமான உட்புற பகுதிகளுடன் விற்பனைக்கு வருகின்றன. அல்ட்ராஸின் உட்புறம் கருப்பு மற்றும் க்ரே நிறத்தில் உள்ளதால் இதன் உட்புற விஷயத்தில் டாடா நிறுவனம் எந்த ரிஸ்க்கையும் எடுக்கவில்லை. இந்த காரின் விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








