புதிய டாடா அல்ட்ராஸ் காரின் இன்டீரியர் ஸ்பை படம்!
டாடா அல்ட்ராஸ் காரின் இன்டீரியர் ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது. இதன் அட்டகாசமான இன்டீரியர் டிசைனை பார்க்கும் வாய்ப்பையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள மாடல் டாடா அல்ட்ராஸ். பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய கார் மாடல் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வர இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது இந்த காரின் டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட டிசைனை பார்ப்பதற்கான வாய்ப்பாக ஸ்பை படம் வெளியாகி இருக்கிறது. ஸிக் வீல்ஸ் தளம் வெளியிட்டு இருக்கும் அந்த ஸ்பை படத்தில் டாடா அல்ட்ராஸ் காரின் இன்டீரியர் மிகச் சிறப்பாக இருப்பதை காண முடிகிறது.

தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்டீயரிங் வீல், அதிலேயே கன்ட்ரோல் சுவிட்சுகள், அலுமினிய அலங்கார அக்சஸெரியுடன் மிக கவர்ச்சியாக தெரிகிறது. அதற்கு கீழாக க்ரூஸ் கன்ட்ரோல் ஸ்டால்க் இடம்பெற்றுள்ளது.

ஃப்ளோட்டிங் வகை தொடுதிரையுடன் இன்ஃப்டோயெின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதற்கு கீழாக ஏசி வென்ட்டுகளும், கட்டுப்பாட்டு அமைப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஆடியோ சிஸ்டத்தின் கட்டுப்பாட்டு அமைப்பும் இடம்பெற்றுள்ளது.

இந்த காரில் டிரைவிங் மோடுகளை கட்டுப்படுத்துவதற்கான பட்டனும் உள்ளது. அதேபோன்று, மல்டி இன்ஃபர்மேஷன் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பையும் காண முடிகிறது. உட்புறத்தில் மூடு லைட்டிங் சிஸ்டமும் உள்ளது ஸ்பை படத்தில் தெளிவாக தெரிகிறது. மொத்தத்தில் மிக பிரிமீயமாக காட்சி தருகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா ஆர்க்கிடெக்ச்சர் கட்டமைப்பு கொள்கையில் புதிய அல்ட்ராஸ் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அழகான வடிவமைப்பு, செயல்திறன் மிக்க எஞ்சின்களை பெற்றிருக்கிறது.

இந்த காரில் 85 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 102 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 90 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் கார் தீபாவளி பண்டிகையொட்டி அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20, ஹோண்டா ஜாஸ், டொயோட்டா க்ளான்ஸா கார்களுடன் போட்டி போடும்.
Source: ZigWheels


Click it and Unblock the Notifications








