5 நட்சத்திர பாதுகாப்பு தரத்திற்கு இணையாக வரும் புதிய டாடா அல்ட்ராஸ் கார்!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டாடா அல்ட்ராஸ் கார் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வர இருக்கிறது.

5 ஸ்டார் பாதுகாப்பு தரத்துடன் வரும் டாடா அல்ட்ராஸ்!

டாடா கார்கள் வேற லெவலுக்கு மேம்பட்டு வருவது குறித்த செய்திகளை டிரைவ்ஸ்பார்க் விரிவாக எழுதி வருகிறது. அந்த வகையில், டாடா நெக்ஸான் உள்ளிட்ட கார்கள் கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது.

5 ஸ்டார் பாதுகாப்பு தரத்துடன் வரும் டாடா அல்ட்ராஸ்!

டாடா நெக்ஸான் தவிர்த்து பிற டாடா கார்களும் 5 ஸ்டார் ரேட்டிங் தரத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டு வருவதாக டாடா மோட்டார்ஸ் அடித்து கூறி வருகிறது. கடந்த மாதம் ஜெனிவாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் பேசிய டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்ட்டெர் பட்ச்சர் கூறுகையில்," எங்களது புதிய கார்கள் அனைத்தும் 5 ஸ்டார் ரேட்டிங் தரத்திற்கு இணையாக உருவாக்கப்பட்டு வருகிறது," என்று கூறினார்.

5 ஸ்டார் பாதுகாப்பு தரத்துடன் வரும் டாடா அல்ட்ராஸ்!

அதன்படி, கடந்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா அல்ட்ராஸ் காரும் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வர இருப்பது உறுதியாகி இருக்கிறது. கன்ட்டெர் பட்ச்சர் கூற்றுப்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஆல்ஃபா மற்றும் ஒமேகா பிளாட்ஃபார்ம்களில் உருவாக்கப்படும் கார்கள் கிராஷ் டெஸ்ட்டிற்கு உட்படுத்தப்பட்டால், 5 நட்சத்திர மதிப்பீடு பெறும் என்று கூறி இருக்கிறார்

5 ஸ்டார் பாதுகாப்பு தரத்துடன் வரும் டாடா அல்ட்ராஸ்!

இந்த நிலையில், ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வரும் டாடா அல்ட்ராஸ் காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. பயணிகளுக்கு போதிய பாதுகாப்பை வழங்கும் வகையில் அதிக ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக இடம்பெறும். அத்துடன், உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

5 ஸ்டார் பாதுகாப்பு தரத்துடன் வரும் டாடா அல்ட்ராஸ்!

எனவே, ஒருவேளை விபத்து நேர்ந்தால் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை டாடா அல்ட்ராஸ் கார் உறுதி செய்யும் வாய்ப்பு உள்ளது. வரும் அக்டோபரில் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், டாடா அல்ட்ராஸ் காரை மோதல் சோதனைக்கு உட்படுத்தினால், அதிகபட்ச தர மதிப்பீட்டுடன் எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5 ஸ்டார் பாதுகாப்பு தரத்துடன் வரும் டாடா அல்ட்ராஸ்!

டாடா அல்ட்ராஸ் கார் மிகச் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் வருவதோடு மட்டுமின்றி, டிசைன், இடவசதி, தொழில்நுட்ப வசதிகள் என அனைத்திலும் மிகச் சிறந்த மதிப்பை தரும் மாடலாக இருக்கும். அத்துடன் விலையிலும் இந்த கார் போட்டியாளர்களுக்கு சவால் விடும்.

5 ஸ்டார் பாதுகாப்பு தரத்துடன் வரும் டாடா அல்ட்ராஸ்!

டாடா அல்டார்ஸ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படும்.

5 ஸ்டார் பாதுகாப்பு தரத்துடன் வரும் டாடா அல்ட்ராஸ்!

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களின் மார்க்கெட்டை குறிவைத்து டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த இரு கார்களும் சராசரியாக மாதத்திற்கு 22,000 கார்களுக்கு மேல் விற்பனையாகிறது. இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் காரும் இந்த சந்தையில் குறிப்பிடத்தக்க சந்தை பங்களிப்பை பெறும் என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 28, 2019, 11:16 [IST]
English summary
Tata Motors unveiled the Tata Altroz recently at the Geneva Motor Show. The car that was unveiled was in near-production format. The Altroz will be the most premium model is Tata's portfolio, and will be the first of the many future cars from Tata that feature the ALFA architecture. If fact, Tata Motors is sure that the Altroz will bag a five start rating at the next NCAP certifications.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+