அல்ட்ராஸ் காரில் இந்த வசதிகளை பார்த்தீங்களா?... மார்தட்டும் டாடா மோட்டார்ஸ்!

அடுத்த மாதம் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. விலை அறிவிப்பு, டெலிவிரி உள்ளிட்ட விபரங்கள் ஜனவரியில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில், இந்த கார் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக முன்னிறுத்தும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

அல்ட்ராஸ் காரில் இந்த வசதிகளை பார்த்தீங்களா?... மார்தட்டும் டாடா மோட்டார்ஸ்!

கூடுதல் மதிப்பு

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் மோத வேண்டி இருப்பதால், அதைவிட கூடுதல் சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருப்பது அவசியமாகி இருக்கிறது. இதற்காக, போட்டி கார் மாடல்களில் இல்லாத சில புதிய வசதிகளை அல்ட்ராஸ் காரில் டாடா மோட்டார்ஸ் வழங்க இருக்கிறது. அதன் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

அல்ட்ராஸ் காரில் இந்த வசதிகளை பார்த்தீங்களா?... மார்தட்டும் டாடா மோட்டார்ஸ்!

ஸ்மார்ட் சாவி

டாடா நெக்ஸான் காரின் விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டில் வழங்கப்படுவது போன்றே, இந்த காரிலும் ஸ்மார்ட் சாவி வழங்கப்பட இருக்கிறது. அதாவது, வழக்கமான சாவி கொத்து போல இல்லாமல், கையிலேயே ஸ்மார்ட் வாட்ச் போன்ற சாவியை இந்த காருக்கு வழங்க இருக்கிறது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். விலை குறைவான வேரியண்ட்டுகளில் வாடிக்கையாளர் விருப்பத்தின் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம்.

அல்ட்ராஸ் காரில் இந்த வசதிகளை பார்த்தீங்களா?... மார்தட்டும் டாடா மோட்டார்ஸ்!

டிரைவிங் மோடுகள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்களில் டிரைவிங் மோடுகள் கட்டாயம் இடம்பெற்று வருகிறது. அதேபோன்று, அல்ட்ராஸ் காரிலும் டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிட்டி மற்றும் ஈக்கோ என்ற இரண்டு விதமான டிரைவிங் மோடுகள் இருக்கின்றன. ஓட்டுனர் விருப்பத்தை பொறுத்து இந்த டிரைவிங் மோடுகளை தேர்வு செய்துகொள்ளலாம். ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது அதிக எரிபொருள் சிக்கனம் பெற முடியும். ஆனால், பவர் மற்றும் டார்க் திறன் 10 சதவீதம் வரை குறையும் என்பதை கவனிக்க வேண்டிய விஷயம்.

அல்ட்ராஸ் காரில் இந்த வசதிகளை பார்த்தீங்களா?... மார்தட்டும் டாடா மோட்டார்ஸ்!

செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்

இதன் ரகத்தில் பெரிய திரையுடன் கூடிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, அனலாக் ஸ்பீடோமீட்டரும், ஆர்பிஎம் அளவு மற்றும் பிற அனைத்து தகவல்களையும் இந்த டிஜிட்டல் திரை மூலமாக பார்த்துக் கொள்ளும் வசதியை அளிக்கும். இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலமாக பெறக்கூடிய சில விஷயங்களையும் ஓட்டுனர் இந்த திரை மூலமாகவே பார்க்க முடியும். இதனால், கவனச் சிதறலை தவிர்க்க முடியும் என்கிறது டாடா மோட்டார்ஸ். இந்த திரையிலேயே நேவிகேஷன் வசதியையும் பெற முடியும்.

அல்ட்ராஸ் காரில் இந்த வசதிகளை பார்த்தீங்களா?... மார்தட்டும் டாடா மோட்டார்ஸ்!

கதவுகளின் சிறப்பு

இந்த காரில் 90 டிகிரி வரை விரிவடையும் கதவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், ஏறி, இறங்குவது மிக எளிதாக இருக்கும். எந்த காரிலும் இந்த அளவுக்கு விரிந்து திறக்கும் கதவுகள் அமைப்பு கொடுக்கப்படவில்லை என்று டாடா மோட்டார்ஸ் மார்தட்டுகிறது. குறிப்பாக, வயதானவர்கள் ஏறி, இறங்குவதற்கு இந்த கதவுகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

அல்ட்ராஸ் காரில் இந்த வசதிகளை பார்த்தீங்களா?... மார்தட்டும் டாடா மோட்டார்ஸ்!

ஆட்டோமேட்டிக் வைப்பர்

டாடா அல்ட்ராஸ் காரில் ஆட்டோமேட்டிக் வைப்பர் பொருத்தப்பட்டு இருக்கிறது. மழை வரும்போது தானியங்கி முறையில் இந்த வைப்பர் வேலை செய்யத் துவங்கிவிடும். மேலும், மழையின் அளவுக்கு தக்கவாறான வேகத்தில் இந்த வைப்பர் வேலை செய்யும். மேலும், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் வசதியும் இடம்பெறுகிறது. இதுவும் நிச்சயம் சிறப்பான வசதியாகவும், கூடுதல் மதிப்பை வழங்கும் விதத்திலும் இருக்கும்.

அல்ட்ராஸ் காரில் இந்த வசதிகளை பார்த்தீங்களா?... மார்தட்டும் டாடா மோட்டார்ஸ்!

பிஎஸ்-6 எஞ்சின்கள்

டாடா அல்ட்ராஸ் காரில் பிஎஸ்-6 எஞ்சின்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎஸ் பவரையும், 113 என்ம் டாரக் திறனையும் வழங்கும். டீசல் மாடலில் இருக்கும் 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும்.

அல்ட்ராஸ் காரில் இந்த வசதிகளை பார்த்தீங்களா?... மார்தட்டும் டாடா மோட்டார்ஸ்!

எதிர்பார்க்கும் விலை

புதிய டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.21,000 முன்பணத்துடன் புக்கிங் செய்யப்படுகிறது. அடுத்த மாதம் 22ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும், பிப்ரவரி மத்தியில் டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 18, 2019, 11:41 [IST]
English summary
Here is the list of top features of Tata Altroz which company thinks that it will help the premium hatchback segment stand out from the clutter.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+