புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கும் முதல் கார் மாடலாக டாடா அல்ட்ராஸ் வர இருக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் 45எக்ஸ் என்ற பெயரில் கான்செப்ட் என்ற மாதிரி மாடலாக காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் தற்போது விற்பனைக்கு தயாரான நிலையில் பார்வைக்கு வந்துள்ளது.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

இந்த கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 3,990 மிமீ நீளமும், 1,755 மிமீ அகலமும், 1,523 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் நீலம் 1,510 மிமீ ஆகவும், தரை இடைவெளி 165 மிமீ ஆகவும் இருக்கிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

புதிய டாடாஅல்ட்ராஸ் காரில் 345 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதி இருக்கிறது. பின் இருக்கை மடக்கினால் 665 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட் ரூம் இடவசதியை பெற முடியும்.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

புதிய டாடா அல்ட்ராஸ் கார் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 4 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. இதில், பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 86 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 90 எச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வர இருக்கின்றன.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

இரண்டு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். சில மாதங்களுக்கு பின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 102 எச்பி பவரை வெளிப்படுத்தும்.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் ஸ்பிளிட் ஹெட்லைட் க்ளஸ்ட்டர், நேர்த்தியான பம்பர் அமைப்பு, லேசர் கட் அலாய் வீல்கள், இரட்டை வண்ணத் தேர்வு மற்றும் பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத்தில் சைடு மிரர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

தவிரவும், உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம், உயர்தர அப்ஹோல்ஸ்ட்ரி, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 2 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன்சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை கொடுக்கப்படுகின்றன.

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் அறிமுகம்

இந்த கார் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் இடையிலான விலையில் வரும் ஜனவரியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. நாளை முதல் இந்த காருக்கு முன்பதிவு துவங்கப்படுகிறது. இந்த கார் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 3, 2019, 18:19 [IST]
English summary
Tata Motors has revealed of its production version Altorz premium hatchback in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+