புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்!

டாடா அல்ட்ராஸ் காருக்கான மிக நீண்ட காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வர இருக்கிறது. இந்த கார் மிக விரைவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எமக்கு கிடைத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்!

கடந்த ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இரண்டு கான்செப்ட் மாடல்களை டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தியது. டாடா எச்5எக்ஸ் என்ற எஸ்யூவி காரின் மாதிரி மாடலும், 45எக்ஸ் என்ற பெயரிலான பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் கான்செப்ட்டும் காட்சிப்படுத்தப்பட்டது. டாடா மோட்டார்ஸ் டிசைனை வேற லெவலுக்கு இந்த இரண்டு கான்செப்ட் மாடல்களும் கொண்டு செல்லும் விதத்தில் அமைந்ததினால், பார்வையாளர்களையும், கார் பிரியர்களையும் வெகுவாக கவர்ந்தது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்!

இதில், டாடா எச்5எக்ஸ் கான்செப்ட் அடிப்படையிலான ஹாரியர் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் 7 சீட்டர் எஸ்யூவியும் விரைவில் வர இருக்கிறது. இந்த நிலையில், அடுத்து 45எக்ஸ் கான்செப்ட் அடிப்படையிலான புதிய ஹேட்ச்பேக் கார் அல்ட்ராஸ் என்ற பெயரில் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்!

இந்த நிலையில், இந்த காரின் முழுமையான தயாரிப்பு நிலை மாடல் வரும் டிசம்பர் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. இந்த காரின் வெளியீடு மற்றும் மீடியா டிரைவிற்காக அனுப்பப்பட்டுள்ள அழைப்பின் மூலமாக இது உறுதியாகி இருக்கிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் புதிய அல்ட்ராஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் மிகவும் கவர்ச்சிகரமாக டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. உட்புறத்திலும் பல்வேறு சிறப்பு அம்சங்களை பார்க்க முடிகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்!

இந்த காரின் டேஷ்போர்டு மிக வசீகரமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கருப்பு வண்ண டேஷ்போர்டு, ஏடி வென்ட்டுகளை சுற்றி பாடி கலரிலான அலங்கார ஆக்சஸெரீ ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக இருக்கும். இந்த காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்!

மேலும், கூகுள் அசிஸ்டென்ட் வசதியும், ஆம்பியன்ட் லைட் சிஸ்டமும் கூட இந்த காரில் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இதன் ரகத்தில் மிக அகலமான காராக வருவதால், உட்புறத்தில் மிகச் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும். 341 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி அளிக்கப்பட்டு இருக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்!

புதிய டாடா அல்ட்ராஸ் காருக்கு மூன்று விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கைவசம் உள்ளது. அதாவது, 85 எச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 102 எச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 90 எச்பி பவரை அளிக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆகிய தேர்வுகள் உள்ளன.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்!

மேலும், நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்விலும் வழங்கப்படும். முதலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டும் கிடைக்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின் தேர்வுகளும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் அறிமுக விபரம்!

புதிய டாடா அல்ட்ராஸ் கார் பாதுகாப்பு அம்சங்களிலும் சிறப்பானதாக இருக்கும். மேலும், தனித்துவமான வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும். ரூ.5.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கலாம். அடுத்த ஆண்டு துவக்கத்தில்.

Most Read Articles
English summary
Tata Motors is all set to reveal production version of its Altroz hatchback in the first week of December.
Story first published: Friday, October 25, 2019, 10:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X