ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

ஜெனிவாவில் துவங்கி இருக்கும் சர்வதேச மோட்டார் கண்காட்சியில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் படங்கள், சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

கடந்த ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 45எக்ஸ் என்ற பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் மாதிரி மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. இதன் அடிப்படையில் தயாரிப்பு நிலை மாடலாக உருவாக்கம் பெற்றிருக்கும் டாடா அல்ட்ராஸ் கார் ஜெனிவா மோட்டார் ஷோ மூலமாக பொது பார்வைக்கு வந்துள்ளது.

ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு இணையான ரகத்தில் வர இருக்கும் இந்த புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் டிசைனில் வசீகரிக்கும் அம்சங்களுடன் வர இருக்கிறது. இந்த கார் 3,988 மிமீ நீளமும், 1,754 மிமீ அகலமும், 1,505 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. 2,501 மிமீ வீல் பேஸ் கொண்டுள்ளது. பரிமாணத்தில் போட்டியாளர்களைவிட சிறிய அளவை பெற்றிருக்கிறது.

ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

எனினும், டாடா அல்ட்ராஸ் காரில் 17 அங்குல அலாய் வீல்கள் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்க விஷயம். இந்த காரில் 205/50 R17 அளவுடைய டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த டர்போசார்ஜ்டு எஞ்சின் அதிகபட்சமாக 102 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

டீசல் மாடலில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலும் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மின்சார காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கும்.

ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் ஃப்ளோட்டிங் ரக தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, டியூவல் ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் வர இருக்கிறது.

ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் அறிமுகம்

ரூ.5.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பிற்பாதியில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Most Read Articles
English summary
Indian automotive giant Tata Motors has revealed the all-new Altroz premium hatchback at the 2019 Geneva Motor Show. The Tata Altroz takes its name from the Albatross, a bird known to soar over the seas with minimal effort. The new Tata Altroz will take on the likes of the Maruti Suzuki Baleno and the Hyundai i20. Tata Motors also revealed the Altroz EV at the 89th Geneva Motor Show.
Story first published: Wednesday, March 6, 2019, 11:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X