டாடா அல்ட்ராஸ் கார் சோதனை ஓட்டங்கள் தீவிரம்... விரைவில் விற்பனைக்கு வருகிறது

நடப்பு ஆண்டின் பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரும் உள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20, மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக பார்க்கப்படும் இந்த கார் வடிவமைப்பில

நடப்பு ஆண்டின் பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரும் உள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20, மாருதி பலேனோ, ஹோண்டா ஜாஸ் கார்களுக்கு போட்டியாக பார்க்கப்படும் இந்த கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும் சிறப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படங்கள்!

ஓரிரு மாதங்களுக்குள் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் தற்போது இறுதிக்கட்ட சாலை சோதனை ஓட்டங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்பை படங்களை காடிவாடி தளம் வெளியிட்டு இருக்கிறது. டாடா டியாகோ காருக்கு மேலான ரகத்தில் இந்த கார் எதிர்பார்க்கப்படுவதுடன், பிரிமீயம் ஹேட்ச்பேக் சந்தையில் உள்ள போட்டியாளர்களை விட விலை குறைவாக இருக்கும் என்ற தகவல் ஆவலை அதிகரித்துள்ளது.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படங்கள்!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், கச்சிதமான க்ரில் அமைப்பு, சிறப்பான பம்பர் தோற்றம் ஆகியவை இந்த காரின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பக்கவாட்டிலும், பின்புறத்திலும் கூட இதன் டிசைன் போட்டியாளர்களிடம் இருந்து வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படங்கள்!

எல்இடி பகல்நேர விளக்குகள் ஹெட்லைட் க்ள்ஸ்ட்டரில் இல்லாமல் பனி விளக்குகள் அறையுடன் சேர்த்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுவும் பம்பர் அமைப்புடன் இயைந்தாற்போல் உள்ளது. கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட பில்லர்கள், சி பில்லரில் கொடுக்கப்பட்டு இருக்கும் கைப்பிடிகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. பின்புறத்தில் ரூஃப் மவுண்ட் ஸ்பாய்லர் அமைப்பும், ஸ்டாப் லைட்டும் உள்ளன.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படங்கள்!

பின்புறத்தில் எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது. இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களையும் இணைக்கும் விதத்தில் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பம்பர் அமைப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. இந்த கார் ஒற்றை வண்ணங்களிலும், இரட்டை வணணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படங்கள்!

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல்் அமைப்பும் முக்கிய அம்சம். இந்த காரில் கருப்பு வண்ண இன்டீரியருடன் கூடுதலாக அலங்கார ஆக்சஸெரீகள் இடம்பெற்றுள்ளன.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படங்கள்!

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், டர்போ சார்ஜர் துணையுடன் இயங்கும் 1.2 லிட்டர்ர ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் 105 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படங்கள்!

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் பெற்றிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டாடா அல்ட்ராஸ் காரின் புதிய ஸ்பை படங்கள்!

ரூ.5.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் எதிர்பார்க்கப்படுகிறது. டாடா டியாகோ, நெக்ஸான், ஹாரியர் வரிசையில் இந்த புத்தம் புதிய கார் மாடலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Most Read Articles
English summary
Tata Motors Altroz has been spied several times being tested on the Indian roads ahead of its launch somewhere during this festive season. The test cars are production-ready and GaddiWaddi has shared a new set of images, which reveal some of the exterior and interior details of the car.
Story first published: Sunday, July 28, 2019, 15:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X