புதிய டாடா அல்ட்ராஸ் காரின் ஸ்பை படங்கள்!

புதிய டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களையும், கூடுதல் தகவல்களையும் இந்த செய்தியில் காணலாம்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் ஸ்பை படங்கள்!

கடந்த மாதம் ஜெனிவாவில் நடந்த மோட்டார் ஷோவில் டாடா அல்ட்ராஸ் கார் பொது பார்வைக்கு வந்தது. இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டை கலக்க இருக்கும் இந்த புதிய கார் மாடல் தற்போது தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் ஸ்பை படங்கள்!

இதுதொடர்பான, ஸ்பை படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த தயாரிப்பு நிலை மாடலில் எந்த மாற்றங்களும் செய்யாமல் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பது ஸ்பை படங்கள் மூலமாக தெரிய வருகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் ஸ்பை படங்கள்!

டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் இந்த காரிலும் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இந்த காரில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் ஸ்பை படங்கள்!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமின்றி, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் ஸ்பை படங்கள்!

இந்த காரில் பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கும். அதனுடன், ஏர்பேக்குகள், இபிடி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் ஸ்பை படங்கள்!

புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்ற கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த கார் உருவாக்கப்பட்டு இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. எனவே, விரைவில் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டால் 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் ஸ்பை படங்கள்!

புதிய டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Carwale

Most Read Articles
English summary
Indian automotive giant Tata Motors revealed the Altroz premium hatchback at the 2019 Geneva Motor Show in March. However, before its expected launch in India later this year ahead of the festive season, Tata Motors is continiuing to put the Altroz to the test, as the images snapped by Carwale's automotive paparazzi.
Story first published: Tuesday, April 23, 2019, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X