டாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு?

டாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு?

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டாடா அல்ட்ராஸ் கார் நேற்று ஜெய்சால்மர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த கார் டிசைன், எஞ்சின் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு?

இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வருகின்றன.

டாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு?

இந்த எஞ்சின்கள் முதலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. எனினும், அடுத்த சில மாதங்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

டாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு?

இந்த சூழலில், புதிய டாடா அல்ட்ராஸ் காரில் ஏஎம்டி அல்லது சாதாரண ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுக்கு பதிலாக டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (டிசிடி) தேர்வு வழங்கப்பட இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு?

ஏஎம்டி மற்றும் சாதாரண ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளை விட இந்த டிசிடி கியர்பாக்ஸ் மென்மையான கியர் மாற்றம் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும். அத்துடன், டாடா அல்ட்ராஸ் காரை போட்டியாளர்களைவிட கூடுதல் மதிப்பு மிக்கதாக மாற்றும்.

MOST READ: பல கோடி மதிப்புள்ள 3 புத்தம் புதிய லம்போர்கினி கார்களை பறிமுதல் செய்த போலீஸ்.. காரணம் என்ன தெரியுமா?

டாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு?

இந்த புதிய டிசிடி கியர்பாக்ஸ் பன்ச் பவர்ட்ரெயின் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்பட உள்ளது. இதற்கான பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்த புதிய கியர்பாக்ஸ் தேர்வு டாடா அல்ட்ராஸ் காரில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ:ஹூண்டாய் கோனா காருக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான புதிய வசதிகள் அறிமுகம்!

டாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு?

டாடா அல்ட்ராஸ் காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இந்த டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் வாய்ப்புள்ளது. ஏனெனில், போட்டியாளர்களான மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களின் பெட்ரோல் மாடலில் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

MOST READ: டாடா அல்ட்ராஸ் காருக்கு கூகுளில் கொடுக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப வசதி!

டாடா அல்ட்ராஸ் காரில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு?

அதேநேரத்தில், அல்ட்ராஸ் டீசல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வருவதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு அக்போடர் மாதத்தில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு டாடா அல்ட்ராஸ் காரில் எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Autocarindia

Most Read Articles

English summary
According to report, the Tata is planning to launch Altroz car with DCT Automatic gearbox option in the near future.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X