புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் களமிறங்க இருக்கும் புதிய டாடா அல்ட்ராஸ் கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த கார் சந்தையை கலக்க வருகிறது. இந்த நிலையில், இந்த காரின் வேரியண்ட்டுகள் மற்றும் அதில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

புதிய டாடா அல்ட்ராஸ் கார் வசதிகளை பொறுத்து 9 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. அல்ட்ராஸ் XE, XE Rhythm, XM, XM Rhythm, XM Style, XT, XT Urban, XZ மற்றும் XZ(O) ஆகிய வேரியண்ட் பெயர்களில் கிடைக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ

விலை குறைவான இந்த வேரியண்ட்டில் மேனுவல் ஏசி சிஸ்டம், சிட்டி மற்றும் ஈக்கோ ஆகிய இரண்டு டிரைவிங் மோடுகளுடன் வருகிறது. இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சென்ட்ரல் லாக்கிங் ஆகிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இ ரிதம்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக 3.5 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், ஃபோல்டபிள் கீ மற்றும் டியூவல் டோன் ஹாரன் ஆகியவை இந்த வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம்

ஹார்மன் நிறுவனத்தின் 3.5 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் விண்டோஸ், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஃபோல்டிங் சைடு ரியர் வியூ மிரர்கள், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் திரை வாயிலாக பின்புறத்தை பார்க்கும் வசதியை அளிக்கும் ரியர் பார்க்கிங் அசிஸ்ட் வசதி, ஓட்டுனர் கால் வைக்கும் பகுதியில் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை இருக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்எம் ரிதம்

இந்த வேரியண்ட்டில் கூடுதலாக 7.0 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் கேமரா ஆகிய வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாட அல்ட்ராஸ் எக்ஸ்எம் ஸ்டைல்

இந்த வேரியண்ட்டில் 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள், விசேஷ வண்ணத்தில் கூரை, பாடி கலர் ரியர் வியூ மிரர்கள், முன்புறம் மற்றும் பின்புறத்திற்கான பனி விளக்குகள், எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி

இந்த வேரியண்ட்டில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் கேமராவுக்கான திரை, ஸ்டார்ட் - ஸ்டாப் சிஸ்டம், எல்இடி பகல்நேர விளக்குகள், 7.0 அங்குல திரையுடன் டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வசதிகள் உள்ளன.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்டி அர்பன்

வெளிப்புற வண்ணத்திற்கு தக்கவாறு உட்புறத்தில் அலங்கார வேலைப்பாடுகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், கருப்பு வண்ண கூரை ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இசட்

இந்த வேரியண்ட்டில் 16 அங்குல டியூவல் டோன் அலாய் வீல்கள், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், ஆட்டோ ஹெட்லைட்டுகள், ரியர் ஏசி வென்ட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், முன்புற, பின்புற ஆர்ம் ரெஸ்ட்டுகள் உள்ளன.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாடா அல்ட்ராஸ் எக்ஸ்இசட் ஆப்ஷன் பேக்

மேற்கண்ட வசதிகளுடன் இந்த வேரியண்ட்டில் விசேஷ கருப்பு வண்ண கூரை அமைப்புடன் கிடைக்கும். இதுதான் மிக விலை உயர்ந்த வேரியண்ட்டாக நிலைநிறுத்தப்படும். புதிய டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 5, 2019, 10:07 [IST]
English summary
Here are the variant wise features of All new Tata Altroz car.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+