ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

ரகசியமாக சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய எஸ்யூவி மாடல் முதல்முறையாக கேமரா கண்களில் சிக்கி உள்ளது. அதன் ஸ்பை படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

தற்போதை சூழலில், எஸ்யூவி ரக கார்களுக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கிறது. இதன் பொருட்டு, பல புதிய மாடல்களை கார் நிறுவனங்கள் தொடர்ந்து களமிறக்கி வருகின்றன. அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து பல புதிய எஸ்யூவி மாடல்களை களமிறக்கி வருகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான், ஹாரியர் உள்ளிட்ட மாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருப்பதுடன், விற்பனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் மாதாமாதம் வழங்கி வருகின்றன. மினி எஸ்யூவி மாடலையும், 7 சீட்டர் ஹாரியர் எஸ்யூவியையும் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

இந்த நிலையில், நெக்ஸான் மற்றும் ஹாரியர் இடையிலான புத்தம் புதிய எஸ்யூவி மாடலை டாடா மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது தெரியவந்துள்ளது. டாடா பிளாக்பேர்டு என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய எஸ்யூவி மாடல் தற்போது ரகசியமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

ஏற்கனவே இதுதொடர்பான சில தகவல்கள் கசிந்தன. அதாவது, செர்ரி டிக்கோ 5எக்ஸ் என்ற சீன எஸ்யூவி மாடலின் ரீபேட்ஜ் வெர்ஷனாக டாடா பிளாக்பேர்டு எஸ்யூவி இருக்கும் என்று தகவல்கள் தெரிவித்தன. ஆனால், தற்போது இந்த புதிய பிளாக்பேர்டு எஸ்யூவியானது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

இந்த புதிய டாடா ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் 3.7 மீட்டர் முதல் 4.3 மீட்டர் நீளமுடைய கார்களை உருவாக்க முடியும். அதன்படி, டாடா நெக்ஸான் கார் 4 மீட்டர் நீளத்திலும், டாடா ஹாரியர் கார் 4.6 மீட்டர் நீளத்திலும் உருவாக்கப்பட்டது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

எனவே, புதிய பிளாக்பேர்டு எஸ்யூவியானது 4.3 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த புதிய எஸ்யூவியின் ஸ்பை படங்களை ரஷ்லேன் தளம் வெளியிட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

புதிய டாடா பிளாக்பேர்டு எஸ்யூவியும் ஹாரியர் போன்ற முகப்பு டிசைன் அம்சங்களை தழுவி டிசைன் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் பானட்டை ஒட்டியும், சற்று கீழ்புறமாக ஹெட்லைட் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கும். பிரம்மாண்ட அலாய் வீல்கள் இதற்கு வலு சேர்க்கும்.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப வசதிகளை இதில் எதிர்பார்க்க முடியும். டாடா நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் இந்த புதிய எஸ்யூவியிலும் இடம்பெற வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

இந்த பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேரடி போட்டியாக புதிய எஸ்யூவியை களமிறக்குகிறது டாடா மோட்டார்ஸ்!

புதிய டாடா பிளாக்பேர்டு எஸ்ஸயூவி வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு கொண்டு வரப்படும். இந்த கார் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் கார்களை குறிவைத்து களமிறக்கப்படும்.

Most Read Articles
English summary
The Tata Blackbird has been spotted testing for the first time. Images of the Tata Blackbird undergoing camouflaged testing in India have surfaced on the internet. Tata Motors has been working on the Blackbird for a while now and the SUV is expected to be launched in 2020.
Story first published: Tuesday, August 27, 2019, 12:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X