டாடா கார்கள் மீது ரூ. 1 லட்சம் வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி விலை அறிவிப்பு!

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு இயங்கி வரும் டாடா கார் தயாரிப்பு நிறுனம், பட்ஜெட் விலையில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறது.

2018 மாடல் டாடா கார்

நாட்டில் அதிகம் விற்பனையாகும் கார்களில் டாடா கார்களும் ஒன்று. இந்த நிறுவனம் தற்போது தனது 2018ம் மாடல் கார்களை சுமார் 1 லட்சம் ரூபாய் வரை எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடியில் விற்பனை செய்ய உள்ளது.

தற்போது டாடா ஷே-ரூம்களில் தேங்கியிருக்கும் 2018 மாடல் கார்களை தள்ளுபடி விலையில் விற்பனைச் செய்யும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக எக்ஸ்சேன்ஜ் மேலா மூலம் டாடா டீலர்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளனர்.

2018 மாடல் டாடா கார்

அதன்படி, டாடா டியாகோ ரூ. 15,000 முதல் 50,000 வரை எக்ஸ்சேன்ஜ் விலையில் விற்பனைச் செய்யப்படுகிறது. அதேபோல, டாடா டிகோர் மீது 25,000 முதல் 70,000 ரூபாய் வரை தள்ளுபடியில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டாடா நெக்ஸான் விலையில் அதிகபட்சமாக 79,000 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்கு எக்ஸ்சேன்ஜாக ரூ. 25,000ம் வழங்கப்படுகிறது.

மேலும், டாடா ஹெக்ஸா காரை 30,000 ரூபாய் எக்ஸ்சேன்ஜ் விலையாகவும், அதில் மேலும் 1.15 லட்சம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவில் இருப்பு உள்ள கார்களைப் பொருத்து விலை குறைக்கப்பட்டு தற்போது விற்பனைச் செய்யப்பட்டு வருகிறது.

2018 மாடல் டாடா கார்

இந்த விலை குறைப்பானது மாநிலங்களுக்கு-மாநிலம், நகரத்துக்கு-நகரம், டீலர்களுக்கு-டீலர் என மாறுபட்ட விலையில் விற்பனையில் செய்யப்படலாம். இந்த எக்ஸ்சேன்ஜ் விற்பனையில் ரூ. 1 லட்சம் 15 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்.

Article Published On: Wednesday, February 6, 2019, 12:24 [IST]
English summary
TATA Dealers Offering Discounts To Clear Previous Year Stock. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X