பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வருகிறது டாடா க்ராவிட்டாஸ்?

பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வருகிறது டாடா க்ராவிட்டாஸ்?

கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலாக க்ராவிட்டாஸ் வர இருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வருகிறது டாடா க்ராவிட்டாஸ்?

இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவியில் அதிக இடவசதி, தொழில்நுட்ப அம்சங்கள், ஆளுமையானத் தோற்றம் ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, ஹாரியர் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் இடம்பெறுகிறது.

பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வருகிறது டாடா க்ராவிட்டாஸ்?

ஆனால், ஹாரியர் எஸ்யூவியில் 140 பிஎச்பி பவைர அளிக்க வல்லதாக இருக்கும் இந்த எஞ்சின், புதிய க்ராவிட்டாஸ் எஸ்யூவியில் 173 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். க்ராவிட்டாஸ் எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். இதன் டீசல் எஞ்சின் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வர இருக்கிறது.

பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வருகிறது டாடா க்ராவிட்டாஸ்?

இந்த நிலையில், புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் க்ராவிட்டாஸ் எஸ்யூவியில் இடம்பெற இருப்பதாக தெரிகிறது.

பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வருகிறது டாடா க்ராவிட்டாஸ்?

இந்த புதிய பெட்ரோல் எஞ்சின் தயாரிப்பு குறித்து டாடா மோட்டார்ஸிடம் இருந்து எந்த உறுதியும் இதுவரை இல்லை. ஆனால், அடுத்த ஆண்டு மத்தியில் பெட்ரோல் எஞ்சின் தேர்வும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கார்தேக்கோ தளத்தின் செய்தி தெரிவிக்கிறது. இந்த பிஎஸ்-6 எஞ்சின் ஹாரியர் எஸ்யூவியிலும் வழங்கப்படும்.

பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வருகிறது டாடா க்ராவிட்டாஸ்?

புதிய பெட்ரோல் எஞ்சின் தவிர்த்து, ஹாரியர் மற்றும் க்ராவிட்டாஸ் கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்பட இருப்பதாக தெரிய வருகிறது. அதாவது, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சப்ளை பெறப்பட இருக்கிறது.

பெட்ரோல் எஞ்சின் தேர்விலும் வருகிறது டாடா க்ராவிட்டாஸ்?

எனினும், டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை டாடா மோட்டார்ஸ் சொந்தமாக உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய கியர்பாக்ஸ் உருவாக்கப் பணிகள் முடிந்தவுடன், உடனடியாக ஹாரியர் மற்றும் க்ராவிட்டாஸ் எஸ்யூவிகளில் வழங்கப்படும்.

டாடா க்ராவிட்டாஸ் காரில் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெர இருக்கின்றன. இந்த கார் ரூ.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி500, விரைவில் வரும் எம்ஜி ஹெக்டர் 7 சீட்டர் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: Cardekho

Most Read Articles
English summary
Tata Motors is all set to introduce the Gravitas SUV in the Indian market in February 2020. The Tata Gravitas will be the brand's flagship SUV based on the popular Harrier offering, launched early this year.
Story first published: Saturday, November 30, 2019, 14:50 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X