டாடாவின் புதிய மினி எஸ்யூவி அறிமுக விபரம்

டாடா நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய மினி எஸ்யூவியின் அறிமுக விபரம் வெளியாகி உள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடாவின் புதிய மினி எஸ்யூவி அறிமுக விபரம்

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா நிறுவனத்தின் புதிய மினி எஸ்யூவி கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த புதியத எஸ்யூவி கான்செப்ட் மாடலானது இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாடாவின் புதிய மினி எஸ்யூவி அறிமுக விபரம்

இந்த நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டாடா மினி எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த மினி எஸ்யூவி மஹிந்திரா கேயூவி100 எஸயூவிக்கு போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவின் புதிய மினி எஸ்யூவி அறிமுக விபரம்

புதிய டாடா மினி எஸ்யூவி ஹார்ன்பில் (எச்2எக்ஸ்) என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. டாடா நிறுவனத்தின் அல்ஃபா கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் மினி எஸ்யூவி கார்களில் அதிக வீல்பேஸ் நீளம் கொண்டதாக இருக்கும் என்பதால், உட்புறத்தில் சிறப்பான இடவசதியை எதிர்பார்க்கலாம்.

டாடாவின் புதிய மினி எஸ்யூவி அறிமுக விபரம்

புதிய டாடா ஹார்ன்பில் எஸ்யூவியானது இரட்டை ஹெட்லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, பெரிய அலாய் வீல்கள், பெரிய வீல் ஆர்ச்சுகள், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. தயாரிப்பு நிலை மாடலிலும் சன்ரூஃப் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

MOST READ: பிஎஸ்-6 கார்கள் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது மாருதி சுஸுகி... என்னவென்று தெரியுமா?

டாடாவின் புதிய மினி எஸ்யூவி அறிமுக விபரம்

புதிய டாடா எச்2எக்ஸ் எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் இணைப்பதற்கான தொடர்பு செயலிகளை இந்த கார் வழங்கும்.

MOST READ: தமிழக அரசு பஸ்கள் இனி வேற லெவல்... அடித்து தூள் கிளப்பும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...

டாடாவின் புதிய மினி எஸ்யூவி அறிமுக விபரம்

புதிய டாடா ஹார்ன்பில் மினி எஸ்யூவியில் 1.2 லிட்டர் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

MOST READ: 15 மனைவிகளுக்காக 19 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் வாங்கிய மன்னர்... விலை மதிப்பை கேட்டு மயக்கம் போட்றாதீங்க

டாடாவின் புதிய மினி எஸ்யூவி அறிமுக விபரம்

புதிய டாடா எச்2எக்ஸ் ஹார்ன்பில் எஸ்யூவியானது ரூ.4.75 லட்சம் முதல் ரூ.5.75 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம். மாருதி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Tata Motors unveiled the H2X Concept (Hornbill)during March this year at the Geneva Motor Show 2019, and the vehicle has had a fan following ever since. The H2X (Hornbill) is expected to be launched sometime during 2020, and a production ready model is expected to be unveiled at the Delhi Auto Expo 2020.
Story first published: Monday, November 25, 2019, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X