டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவி குறித்த ரகசியத்தை போட்டுடைத்த அதிகாரி!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்று புத்தம் புதிய கார் மாடல்களை அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. முதலாவதாக, அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரை மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவி குறித்த ரகசியத்தை போட்டுடைத்த அதிகாரி!

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு போட்டியான ரகத்தில் வர இருக்கும் புதிய அல்ட்ராஸ் கார் மிக சவாலான விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலான கசினி என்ற புதிய எஸ்யூவி மாடலை அறிமுகப்படுத்த உள்ளது.

டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவி குறித்த ரகசியத்தை போட்டுடைத்த அதிகாரி!

மூன்றாவதாக, எச்2எக்ஸ் என்ற பெயரில் குறிப்பிடபடும் ஹார்ன்பில் என்ற மினி எஸ்யூவி மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த நிலையில், அல்ட்ராஸ் மற்றும் எச்2எக்ஸ் மினி எஸ்யூவி குறித்த முக்கிய விஷயத்தை டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்டெர் பட்செக் வெளியிட்டுள்ளார்.

டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவி குறித்த ரகசியத்தை போட்டுடைத்த அதிகாரி!

ஃபார்ச்சூன் இந்தியா என்ற பத்திரிக்கைக்கு கன்டெர் பட்செக் அளித்துள்ள பேட்டியில்," அல்ட்ராஸ் மற்றும் எச்2எக்ஸ் ஆகிய இரண்டு கார்களும் பெரும்பான்மையான பாகங்களை பங்கிட்டுக் கொள்ளும். அல்ட்ராஸ் காரின் 70 சதவீத பாகங்களை எச்2எக்ஸ் மினி எஸ்யூவி பங்கிட்டுக் கொள்ள இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவி குறித்த ரகசியத்தை போட்டுடைத்த அதிகாரி!

அதாவது, இந்த இரண்டு கார்களும் கிட்டத்தட்ட ஒரே கார்கள்தான். ஆனால், வடிவமைப்பில் மட்டுமே மாறுபடும் என்று அவர் கூறி இருக்கிறார். அல்ட்ராஸ், எச்2எக்ஸ் ஆகிய இரண்டு கார்களும் ஆல்ஃபா கட்டமைப்பு கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, இரு கார்களிலும் ஒரு உதிரிபாகங்களை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவி குறித்த ரகசியத்தை போட்டுடைத்த அதிகாரி!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆல்ஃபா மற்றும் ஒமேகா ஆகிய இரண்டு கட்டமைப்பு கொள்கைகளின் கீழ் கார்களை உருவாக்கி வருகிறது. ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் 3.7 முதல் 4.2 மீட்டர் வரையில் நீளம் கொண்ட கார்களும், ஒமேகா பிளாட்பார்மிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவி குறித்த ரகசியத்தை போட்டுடைத்த அதிகாரி!

ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் முதல் கார் மாடல் அல்ட்ராஸ். இரண்டாவது கார் மாடலாக ஹார்ன்பில் மினி எஸ்யூவி வர இருக்கிிறது. இந்த மாடல்கள் டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையில் வடிவமைக்கப்படுகின்றன.

டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவி குறித்த ரகசியத்தை போட்டுடைத்த அதிகாரி!

புதிய டாடா அல்ட்ராஸ் மற்றும் ஹார்ன்பில் மினி எஸ்யூவி கார்களில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஹெட்லைட்டுகள், எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் ஆகிய அனைத்துமே இரண்டு கார்களிலுமே ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், எஞ்சின் ட்யூனிங்கில் மாறுபடும்.

டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவி குறித்த ரகசியத்தை போட்டுடைத்த அதிகாரி!

புதிய டாடா அல்ட்ராஸ் கார் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் ரகத்திலும், எச்2எக்ஸ் மினி எஸ்யூவி ஆகிய கார்கள் ரூ.5 லட்சத்தையொட்டி விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட மிக சவாலான விலையில் அதிக சிறப்பம்சங்களை இந்த கார்கள் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Motors is all set to launch its first premium hatchback offering in the Indian market, sometime ahead of the festive season this year. The Tata Altroz was first showcased at the 2019 Geneva Motor show earlier this year.
Story first published: Friday, July 26, 2019, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X