டாடா ஹார்ன்பில் எஸ்யூவி மின்சார மாடலிலும் அறிமுகமாகிறது

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி மின்சார மாடலிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பேட்டரியில் இயங்கும் மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா!

பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களை அறிமுகப்படுத்துவதில் டாடா மோட்டார்ஸ் மிக தீவிர கவனம் செலுத்தி வருகிறது. டாடா டியாகோ மற்றும் டிகோர் மின்சார கார் மாடல்களை உருவாக்கிவிட்ட அந்த நிறுவனம் அடுத்து இரண்டு புதிய மின்சார கார் மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

பேட்டரியில் இயங்கும் மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா!

அதன்படி, விரைவில் அறிமுகமாக இருக்கும் அல்ட்ராஸ் பிரிமீயம் ரக ஹேட்ச்பேக் காரின் மின்சார மாடலை அறிமுகம் செய்ய இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த டாடா எச்2எக்ஸ் மினி எஸ்யூவியின் மின்சார மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

பேட்டரியில் இயங்கும் மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா!

எக்கனாமிக் டைம்ஸ் இதழுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கன்ட்டெர் பட்செக் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்," ஒரே சார்ஜில் 200 முதல் 230 கிமீ தூரம் பயணிக்கும் மின்சார கார் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

பேட்டரியில் இயங்கும் மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா!

மேலும், எங்களது புதிய ஆல்ஃபா மற்றும் ஒமேகா பிளாட்ஃபார்ம்களில் உருவாக்கப்படும் கார்களின் மின்சார மாடல்களையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் இரண்டு புதிய கார்களின் [அல்ட்ராஸ் மற்றும் எச்2எக்ஸ் (ஹார்ன்பில்) ] அடிப்படையிலான மின்சார மாடலிலும் அறிமுகம் செய்யப்படும்.

பேட்டரியில் இயங்கும் மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா!

வாடிக்கையாளர்களுக்கு தோதுவாக அனைத்து மின்சார கார் மாடல்களையும் ரூ.15 லட்சத்திற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டம் உள்ளது," என்று கூறினார்.

பேட்டரியில் இயங்கும் மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா!

கடந்த மாதம் ஜெனிவாவில் நடந்த மோட்டார் ஷோவில் டாடா ஹார்ன்பில் எஸ்யூவி கான்செப்ட் மாடல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போதே எல்லோரின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மினி எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது.

பேட்டரியில் இயங்கும் மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா!

டாடா ஹார்ன்பில் மினி எஸ்யூவியில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் பயன்படுத்தப்பட இருக்கிறது. டீசல் எஞ்சின் ஆப்ஷன் இருக்காது. அதற்கு பதிலாக, மின்சார கார் மாடலை அறிமுகம் செய்வதில் டாடா மோட்டார்ஸ் கவனம் செலுத்தி வருகிறது.

பேட்டரியில் இயங்கும் மினி எஸ்யூவியை களமிறக்கும் டாடா!

டாடா அல்ட்ராஸ் காரைவிட இந்த புதிய மினி எஸ்யூவி 50 மிமீ வீல் பேஸ் நீளம் குறைவானது. ஆனால், உட்புற இடவசதி மிகச் சிறப்பாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதனால், ஹேட்ச்பேக் ரக கார்களின் மார்க்கெட்டையும் புதிய ஹார்ன்பில் எஸ்யூவி ஒரு கை பார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: ET Auto

Most Read Articles
English summary
According to media reports, Tata Motors is planning to add Altroz EV, based on its premium hatchback and H2X, small SUV EV, to complement Tiago and Tigor EV.
Story first published: Wednesday, April 17, 2019, 9:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X